பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இரண்டாம் பதிப்பின் முன்னுரை

பாரதியின் புதிய ஆத்திசூடி ஒரு விளக்கவுரை

- இரண்டாம் பதிப்பு கொண்டுவருவதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். முதல்பதிப்பு பெரும்பாலும் சென்னை, கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நூலகங்களுக்கென விற்பனையாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களும் இந்நூலை பள்ளிகளின் நூலகங்களிலும் வாங்கிவைக்கும்படி செயல்முறை ஆனை மூலம் பரிந்துரை செய்துள்ளார்கள். அதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நூலின் சிறப்பு பற்றியும், பயன்பாடு பற்றியும் பலரும் பாசிரியரிடம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்கள். சில பள்ளிகளில் சாலையில் மாணவர்களின் தமிழ் வணக்கத்தின் போது பாரதியின் புதிய ஆத்திசூடியின் ஒருநாளுக்கு ஒரு ஆத்திசூடிவீதம் படித்து விளக்கம் கூறப்படுகிறது.

பாரதியின் புதிய ஆத்திசூடியை மேலும் பிரபலப்படுத்த வேண்டும். பாரதியின் இந்த அறிய பொக்கிஷத்தைப் பரப்புவதில் இந்த நூல் செய்து வரும் சிறிய தொண்டுக்கு ஆதரவும் ஆசியும் கேட்டு தமிழ் கூறும் நல்லுலகை வேண்டுகிறோம்.

இந்த இரண்டாம் பதிப்பை சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய பல், பிரிண்டர்ஸ் நிருவனத்தினருக்கு எனது பாராட்டுகளையும் பன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலின் முதல் பதிப்பிற்கு பெருமளவில் ஆதரவளித்தது

போன்று இந்த இரண்டாம் பதிப்பிற்கும் பெரிதும் ஆதரவு அளிக்க தமிழ் கூறும் நல்லுலகத்தை வேண்டுகிறேன்.

அ.சீனிவாசன்

நூலாசிரியர் / பதிப்பாளர்