பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

தாக்குதல் வந்தாலும் நிமிர்ந்து நிற்கும். எதற்கும் அஞ்சாது துணிவுடன் நிமிர்ந்து நிற்பதற்கு குன்றுபோல் நின்றான் என்பது உவமையாகும்.

"தொல்லை இகழ்ச்சிகள் திர - இந்தத் தொண்டு நிலைமையைத் துரவென்று தள்ளி”

குன்றென நிமிர்ந்து நிற்கும்படி பாரதி நமக்குக் கட்டளையிடுகிறார்.

பயத்தைக் கொன்று, பகையை வென்று, குன்றென நிமிர்ந்து நிற்கக் கூறுகிறார் பாரதி.

நெஞ்சில் உறமின்றி, நேர்மைத் திறமின்றி, அச்சமும் பேடிமையும், அடிமைச் சிறுமதியும், கொண்டு கூனிக்குறுகி, குனிந்து நிற்பது அடிமைத்தனமாகும். இதை பாரதி வெறுத்தார். அத்தகைய இழிநிலையை நீக்கி குன்றென் நிமிந்து நிற்கும்படி கூறுகிறார் பாரதி.

அநீதிகளையும், கொடுமைகளையும் எதிர்த்து தருமம், சத்தியம், சுதந்திரம், அறிவு, என்பவைகளைப் போற்றிட குன்றென நிமிர்ந்து நிற்கக் கூறுகிறர் பாரதி.

18. கூடித் தொழில் செய்

பாரதியின் புதிய ஆத்திசூடி கூடித் தொழில் செய்’ என்பது ஒரு சிறந்த செய்யுளாகும். சாதாரணமாக அதைப் படிக்கும் போது சேர்ந்து தொழில் செய்ய வேண்டும் என்று பொருள்படும். ஆனால் சற்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் போது அதனுடைய விரிவான தத்துவப் பொருள் தெளிவாக விளக்கும்.

மனிதன் பொதுவாக சேர்ந்தே தொழில் செய்கிறான். மனிதன் தனியாக இருக்கிறான். வேலை செய்கிறான்.