பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாரதியின் புதிய ஆத்திசூடி O

இயற்கையிலும் இந்த தனித்தன்மையும் பொதுத் தன்மையும் இணைந்து காணப்படுவதைப் பார்க்கலாம். மனித சமுதாய அமைப்பிலும் அதன் சாயலைக் காண்கிறோம். அத்தகைய இரு தன்மைகளும் இயற்கையிலும் சரி, சமுதாயத்திலும் சரி ஒன்றுபட்டும், முரண்பட்டும் அதே சமயத்தில் சேர்ந்தும் இணைந்தும் இருக்கின்றன. செயல்படுகின்றன, மனிதனும் சமுதாயத்தில் சேர்ந்தும் இணைந்தும் கூடித்தொழில் செய்கிறான். வேலை செய்கிறான். வாழ்க்கை நடத்துகிறான்.

பாரதியும் "காக்கை குருவி எங்கள் சாதி - நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்றும், "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுதுக்கும் பொதுவுடமை” என்றும் பாடுகிறார்.

எனவே மனிதன் ஒரு சமுதாயப் பிராணி என்னும் முறையில் இயற்கை சக்திகளுடன் மட்டுமல்லாமல் சமுதாயக் கூறுகளுடனும் இணைந்தும் இசைந்தும் வாழ்கிறான், வாழ வேண்டும், அதேபோல மனித சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவும் இதர பிரிவுகளுடன் ஒன்றுபட்டும் முரண்பட்டும் இருந்தாலும் இணைந்தும் இசைந்தும் வாழ்கின்றன. வாழவேண்டும். இல்லாவிட்டால் சேதங்கள் ஏற்படுகின்றன.

தனிமனிதன், குடும்பம், ஊர், தேசிய இனம், தேசம் மற்றும் இதர மனித சமுதாய அமைப்புகள் பிரிவுகள், ஆகியவை உள்ளும் புறமும் இணக்கமும் இசைவும் இல்லாமல் முரண்பாடுகள் மட்டும் முற்றும் போது சண்டைகளும், மோதல்களும், போர்களும், படுகொலைகளும் ஏற்பட்டு சேதங்கள் விளைகின்றன. அத்தகைய சேதங்களைத் தவிர்க்க அவைகளுக்கு இடையில் இணக்கமும் இசைவும் அவசியம். இதை பல அறிஞர்களும் ஆதிகாலம் முதல் கூறி வந்துள்ளார்கள்.

ஆதிமனிதன், தானும் தனது குழுவும் உயிர் வாழ்வதற்கு அவசியமான உணவுப் பொருள்களைச் சேகரிப்பதற்கும், விலங்குகள், பறவைகள் முதலியவற்றில் இருந்து வரும் அபாயங்களில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கும் கூட்டாகச் சேர்ந்தே தங்கள் பணிகளை ஆற்றி வந்திருக்கிறார்கள்.