பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாதியின்-புதிய-ஆத்திசூடி-O

மனிதன் தனது தேவைகளுகாக இயற்கை சக்திளையும் அவைகள் மூலம் கிடைக்கும் ஆற்றல்களையும் கூட்டு முயற்சியால் பயன்படுத்திக் கொண்டான், மனிதன் தனது கூட்டு முயற்சியால் நீராவி சக்தி, இயற்கை வாயு எண்ணை எரிபொருள் சக்தி, வெப்பசக்தி, மின்சார சக்தி, காற்று சக்தி, கடல் அலை சக்தி, அணுசக்தி முதலியவைகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டான்.

மனிதன் தனது கூட்டு முயற்சியால் உலோகங்களை உருக்கி உழைப்பிற்கான கருவிகளையும் பலவகை எந்திரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கிக் கொண்டான். இன்று மனிதன் தனது கூட்டு உழைப்பால் பெருமளவில் வாழ்க்கையிலும், தொழில் துறையிலும், விவசாயத் துறையிலும், கல்வித் துறையிலும், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத் துறையிலும் உற்பத்தித் திறனிலும் அறிவு ஆற்றலிலும் முன்னேற்றம் கண்டிருக்கிறான்.

இருப்பினும், மனிதன் உணர்வு பூர்வமாகக் கூடித் தொழில் செய்வதில் பல குறைகளும் பலவீனங்களும் ஏற்பட்டு பாதிப்புகள் வருகின்றன. முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்பட்டு சேதங்கள் உண்டாகின்றன. இவைகளைத் தவிர்த்து கூடித் தொழில் செய்து முன்னேற்றம் காண வேண்டும் என்பது பாரதியின் விருப்பமும், கனவுமாகும்.

நமது ஊர் மக்கள் கூடித் தொழில் செய்து ஊர் முன்னேற வேண்டும். கூடித் தொழில் செய்து நமது மாநிலத்தை முன்னேற்ற வேண்டும். நமது நாட்டை முன்னேற்ற வேண்டும். பல நாட்டு மக்களும் ஒத்துழைத்து கூடித்தொழில் செய்து மனிதகுலத்தை முன்னேற்ற வேண்டும்.

சிறிய பிரச்சனைகளில் இருந்து பெரிய பெரிய பிரச்சனைகள் வரை மனிதன் கூட்டு முயற்சி மூலம் தீர்வு காண வேண்டும். தனிமனிதத் தேவைகளில் இருந்து மனிதகுலம் முழுவதினுடைய தேவைகள் வரை அனைத்திற்கும் மனிதன் தனது கூட்டு முயற்சி மூலம் நிறைவேற்ற வேண்டும்.