பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 45

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஏகாதிபத்திய வல்லரசுகளின் சுரண்டல் காலனி ஆதிக்கம், போர் வெறி ஆகிவவைகளுக்கு எதிராக பல நாடுகளும் புரட்சிகளும் தேச விடுதலைப் போராட்டங்களும் நடந்து படிப்படியாகப் பல நாடுகளும் சுதந்திரம் அடைந்தன. இப்போது அநேகமாக உலகில் உள்ள எல்லா நாடுகளும் சுதந்திர நாடுகளாகி விட்டன. அந்த நாடுகளில் சுதந்திரமாக முன்னேற்றம் கண்பதற்கான முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. கூட்டு முயற்சிகளும் பெருகி வருகின்றன.

உலக அளவில் சில முக்கியமான பெரிய வல்லரசுகள் மற்றும் அந்நாடுகளில் உள்ள பெரிய பகாசுர பன்னாட்டு கூட்டு நிறுவனங்களின் பொருளாதார ஆதிக்க மும் அரசியல் சூழ்ச்சிகளும் ஆங்காங்கு நடைபெறும் சில குழப்பங்களும் போர்களும் பல பாதிப்புகளை உண்டாக்கிய போதிலும் உலக அளவில் நாடுகளுக்கு இடையில் கூட்டுறவு ஒத்துழைப்பு, சுதந்திரம், ஜனநாயகம், சமுதாய முன்னேற்றம், உலக சமாதானம், போர் இல்லாத அமைதியான உலகம், படை பலக்குறைப்பு அபாயகரமான ஆயுதங்கள் அழிப்பு, விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி, சமத்துவமான முறையில் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் நாடுகளுக்கு இடையில் கூட்டு முயற்சி வர்த்தகம் பொருளாதார வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி நாடுகளுக்கு இடையில் உள்ள பொதுப் பிரச்சனைகளான இயற்கைச் சூழல் பாதுகாப்பு அனைத்து மக்களுக்கும் உணவு, கல்வி, சுகாதாரம், நலவாழ்வு ஆகியவற்றை உத்தரவாதப் படுத்துதல் முதலிய பல துறைகளிலும் கூட்டு முயற்சிகளும் கூடிப் பணியாற்றுவதும் அதிகரித்து வருகிறது, இதில் மேலும் அபிவிருத்தி காண முயற்சிக்க வேண்டும்.

அன்னிய ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்பட்டு சிறுமைப்பட்டு இருந்த பாரத நாடு பல துறைகளிலும் வாய்ப்புகள் இழந்து பின் தங்கி இருந்த காலத்தில் பாரதி கூடித் தொழில் செய் என நமது குழந்தைகளுக்குப் போதித்தார். இன்று அந்த போதனை இன்னும் அதிகமான அளவில் விரிவான அளவில், மிகவும் பொருத்தமாகவே உள்ளது.