பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X அ.சீனிவாசன் 47

கஷ்டங்கள் மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. சோர்வுகள் ஏற்படாமல் கஷ்டங்களையும் தோல்விகளையும் சமாளித்தால்தான் மேலும் தோல்விகளும் கஷ்டங்களும் ஏற்படாமல் தவிர்க்கவும் தடுக்கவும் முடியும்.

'வாடி நில்லாதே - மனமே, வாடி நில்லாதே ”

என்று பாரதி பாடுகிறார்.

“இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது அர்ஜுனனுக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது. அபகீர்த்தி தருவது. பார்த்தா, பேடித்தன்மையை அடையாதே! இது உனக்குப் போருந்தாது, இழிபட்ட மனத்தளர்ச்சியை நீக்கி வழுந்து நில், என்று கிருஷ்ண பரமாத்மா தனது பகவத்கீதை

தேசத்தைத் தொடங்குகிறார்.

வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை கொள்ள வேண்டும் என்பது பெரியோர் வாக்கு.

'இடுக்கண் வருங்கால் நகுக”

கஷ்டங்கள் வந்தாலும் நாம் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் காணப்பட வேண்டும் என்பது வள்ளுவர் வாக்கு. எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் நாம் கலங்காமல் சோர்வு அடையாமல் இருக்க வேண்டும், எந்த வகையிலும் நமக்கு சோர்வு ஏற்பட்டால் அது நம்மைக் கெடுத்து விடும். எனவே சோர்வு கொள்ளலாகாது.

20. கேட்டிலும் துணிந்து நில்

நமக்கு கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், தோல்விகள், தொல்லைகள் ஏற்பட்டாலும் வாட்டம் அடையக்கூடாது. என்பது மட்டுமல்ல அத்தகைய கேடுகள் வந்தாலும் அவைகளை எதிர்த்து துணிவுடன் நிற்க வேண்டும். நமக்கு வெற்றிகள் கிடைக்கும்