பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

போதும், நல்லது விளையும் போதும் உற்காசத்துடன் முன்னேறிச் செல்வது பெரிய காரியம் அல்ல. நமக்குத் தோல்விகள் ஏற்படும் போது கேடுகள் நேரிடும் போதும் அவைகளை எதிர்த்துத் துணிவுடன் நின்று சமாளிக்க வேண்டும். துணிவு என்பது நமக்கு எப்போதும் வேண்டும் நமக்குக் கேடுகள் ஏற்பட்டபோதும் துணிச்சலுடன் செயல்களை கடமைகளை ஆற்ற வேண்டும்.

“விடத்தையும் நோவையும் வெம்பகையதனையும் துச்சம் என்றெண்ணித் துயரிலாதிங்கு நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்றோங்கலாம்”

என்று பாரதி கூறியுள்ளதை நினைவில் கொண்டு கேட்டிலும் துணிந்து நிற்போம்.

21. கைத்தொழில் போற்று

தொழில்களையும் தொழிற் கருவிகளையும் கடவுளாகப் போற்றுவது நமது நாட்டு மக்களின் மரபாகும்.

'இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவிரே எந்திரங்கள் வகுத்திடுவிரே கருபைச்சாறு பிழிச்திடுவிரே கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவிரே பெரும்புகழ் துமக்கே யிசைக்கின்றேன் பிரமதேவன் கலையிங்கு நீரே, ”

என்று பாரதி தொழிலையும் அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளரையும் போற்றிப் பாடுகிறான்.

கைத் தொழில் என்பது மனிதன் செய்யும் எல்லாத் தொழில்களையும் குறிக்கும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியை ஒட்டி தொழில்களும் அதறகான சாதனங்களும் கருவிகளும் விசை சக்திகளும் தொழில் நுட்பங்களும் வளர்ச்சியடைந்து கொண்டே வந்திருக்கின்றன.