பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 49

உணவு சேகரித்தலும் வேட்டையாடுதலும் மனிதனின் ஆரம்ப காலத் தொழிலாக இருந்தது. பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து, கால்நடை பராமரித்தல், மீன்பிடித்தல், விவசாயத் தொழில், உலோகத் தொழில், நெசவுத் தொழில் முதலிய பல தொழில்களும் படிப்படியாக வளர்ச்சி அடைந்தன. இப்போது எந்திர சக்தியும் விசை சக்திகளும் வந்த பின்னர் எண்ணற்ற தொழில்கள் வந்துவிட்டன. அந்தத் தொழில்களை எல்லாம் நாம் போற்றி காக்க வேண்டும். போற்றி வளர்க்க வேண்டும்.

நமது நாடு பெரிய நாடு. மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடு. இங்கு ஏராளமான இயற்கை வளங்கள் அதிகம் உள்ளன. நமது மக்கள் அனைவரும் ஒருவர் @ தவறாமல் ஏதாவது ஒரு தொழிலைச் செய்தால்/ འ་འུ། བླླ་ 姿でア - நமது நாடு வேகமாக முன்னேறுவதற்கு థ్రి) 薰 வாய்ப்புகள் ஏற்படும். அதனால் தான் நமது تم نقل ركعتين تاريخ முன்னோர்கள் தாங்க ள் செய்யும் தொழில்களைத் தெய்வமாகப் போற்றினார்கள். தொழில் கருவிகளையும், உபகரணங்களையும் வைத்து ஆயுத பூசை நடத்தி வழிபட்டுப் போற்றி வணங்கினார்கள். அதனால் தான் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாரதி பாடினார்.

o o یکیت

நமது நாட்டு மக்கள் உழவுத் தொழிலோடு பலவகையான துணைத் தொழில்களையும் சிறு தொழில்களையும் கைவினைத் தொழில்களையும் வளர்த்துள்ளார்கள்.

தென்னை, பனைமரத் தொழில்கள், அதில் காய் பறித்தல் சாறு எடுத்தல், மட்டைகள் மூலம் நார் எடுத்தல் கயறு திரித்தல், ஒலை பின்னுதல், துடைப்பம் தயாரித்தல், பனையோலை மூலம் பெட்டி, முறம் முதலியவை செய்தல் கிடுகு பின்னுதல் முதலிய தொழில்கள் பாய் முடைதல் பருத்தியிலிருந்து பஞ்சு எடுத்தல், நூல் நூற்றல், நெசவு நெய்தல், ஆடைகள் தயாரித்தல், மீன் பிடித்தல், உப்பு எடுத்தல், கப்பல் தொழில்கள், தச்சு வேலை,