பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

கொல்லு வேலை முதலிய ஐந்தொழில்கள், தங்கம், வெள்ளியினால் ஆன ஆபரணத் தொழில்கள் கட்டிடத் தொழில் சிற்பம் முதலிய பல்வேறு கலைத்தொழில்கள் இவை போன்ற எண்ணற்ற தொழில்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பழைய தொழில்களையும் புதிய நவீனமான பலவகையான எந்திரத் தொழில்களையும் பாதுகாத்துப் போற்றி வளர்த்தால் தான் நாட்டுமக்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியும். மக்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். இத்தகைய கைத்தொழில்களை எல்லாம் சிரத்தையுடன் செய்ய வேண்டும். உணர்வு பூர்வமாக வளர்க்க வேண்டும். அதைத்தான் பாரதி கைத்தொழில் போற்று என்று கூறியுள்ளார்.

22. கொடுமையை எதிர்த்து நில்

கொடுமைகள் எங்கு நிகழ்ந்தாலும் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்று பாரதி கூறுகிறார். அதில் முக்கியமாக நாடடில் அன்னிய ஆட்சியின் கொடுமைகள் பாரதியின் கண்ணெதிரில் நின்றன. அன்னிய ஆட்சியின் கொடுமைகள் முதலிடத்தில் நின்றன. தடை உத்தரவுகள், ஊரடங்குச் சட்டங்கள். சிறைவாசம், சிறைக்கொடுமைகள், தடியடி, கண்ணிர் புகைக் கொடுமைகள் முதலியன சர்வ சாதாரணமான சட்டங்களாக அமுலாயிருந்தன. "வாழ்க திலகர் நாமம் வாழ்க வாழ்கவே வீழ்கக் கொடுங்கோன்மை வீழ்க வீழ்கவே!” என்று திலகர் நாமம் வாழ்கவென்றும் கொடுங்கோன்மை வீழ்கவென்றும், திலகர் மீது அடக்குமுறைச் சட்டங்கள் ஏவப்பட்ட போது பாரதி உணர்ச்சி பூர்வமாக அப்பாட்டை பாடினார்.

'இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம், இவ்வாறங்கே செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் தீர்ந்த போதில் ”

என்று ஜார் ஆட்சியின் கொடுமையைப் பற்றி பாரதி கூறுகிறார்.