பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[...) அ.சீனிவாசன் 53

சின் கனமாகக் கருதப்படுகிறது. பாரதி காலத்தில் அன்னியர் ஆட்சியின்கீழ் நாடு அடிமைபபட்டுக் கிடந்தது. எனவே ஆட்சி அதிகாரம் நமது கைக்கு வரவேண்டும் என்னும் பொருளில் கோல் கை கொண்டு வாழ் என்று பாரதி கூறியிருக்கலாம்.

மன்னனுக்குத் தமிழில் காவலன் என்று ஒரு பெயர் உண்டு. காவலன் கையில் கோல் இருப்பது மிகவும் அவசியமான தொன்றாகும். நல்லாட்சியை செங்கோல் ஆட்சி அதாவது செம்மையான கோல் என்றும், கொடுமையான ஆட்சியைக் கொடுங்கோல் என்றும் கூறுகிறோம். கோல் என்றால் ஆளுமைக்கும் குறிப்பிடலாம். ஆட்சிக்குரிய சின்னங்களில் ஒன்றாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக சக்கரம் என்றும் சொல் கூட பரந்த பொருளில் ஆணைச்சக்கரம் என்று ஆளுமைக்குரியதாக எடுத்துக் கொள்கிறோம். கண்ணன் கையில் சக்கரம் உள்ளது. சக்கரத்தைக் கொண்டு உலகை ஆளுமை செய்து பரிபாலிக்கிறான் என்று கூறலாம். கண்ணன் கையில் கோலும் இருந்தது. கோல் கையில்

கொண்டு தேரை நடத்தி பாரதப் போரையும் நடத்தி முடித்தான்.

சக்கரம் காலச்சக்கரம், வண்டிச்சக்கரம், எந்திரச்சக்கரம் ஆட்சிச்சக்கரம், தர்மச்சக்கரம் என்றெல்லாம் கூறுகிறோம். அசோகன் தர்மசக்கரத்தைத் தனது ஆட்சியின் சின்னமாக

வைத்திருந்தான். அது இப்போது நமது நாட்டின் ஆட்சிச சின்னமாக இருக்கிறது.

அது போல் கோலும் ஆளுமைச் சின்னமாகக் கருதப்படுகிறது. கோல் கை கொண்டிருப்பது அரசன் மட்டுமல்ல உழவர்கள் தங்கள் கையில் கோல் வைத்திருக்கிறார்கள். அவர்கள் அl ஒட்டுவதற்கும் வண்டி ஒட்டுவதற்கும் கையில் கோல் வைத்துக் கோண்டிருக்கிறார்கள். ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கையில் கோல் வைத்துக் கொள்கிறார்கள். தலையாரிகளின் கையில் கோல் கொடுத்து அவர்கள் ஆட்சியின் சின்னமாகக் கருதப்பட்டார்கள்.

காவலர்கள் வயதானவர்கள், மந்திரவாதிகள் (மந்திரக்கோல்) குறி சொல்பவர்கள் இப்படி பலரும் கையில் கோல் வைத்துக்