பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாரதியின் புதிய ஆத்திசூடி O

கோள்கிறார்கள் சில விளையாட்டுகளிலும் கோல் உண்டு முன்னாளில் கோல் பயிற்சி (சிலம்பம்) உடற்பயிற்சி மற்றும் போர்ப்பயிற்சியின் பகுதியாக இருந்தது. ஆட்டங்களில் கோலாட்டம் ஒரு முக்கியமான ஆட்டமாகும். கேரளாவில் அதை கோல் களி என்றும் பிரபலமாகக் குறிப்பிடுவார்கள். எனவே கோல் பயிற்சி பெறுவதும் கையில் கோல் வைத்திருப்பதும் ஆளுமையின் சின்னமாக வீரத்தின் சின்னமாக பாரதி குறிப்பிட்டுள்ளார்.

ஆதி மனிதனுக்குக் கல்லும் கம்பும் தான் முதல் கருவிகளாகப் பயன்படிருக்கின்றன. பின்னர் கோல்களை வைத்து வேறு பல கருவிகளையும் ஆயுதங்களையும் செய்து மனிதன் பயன்படுத்தி இருக்கிறான். இரு கைகளையும் தொங்கவிட்டுக் கொண்டு குனிந்து சென்று கொண்டிருந்த ஆதிமனிதன் நிமிர்ந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் காரணமாக அமைந்தது கோல்தான்.

மனிதனை நிமிரச் செய்ததும், மனிதனுக்குத் துணையாக இருப்பதும் மனிதனுக்கு ஒரு கம்பீரத்தைக் கொடுப்பதும், ஆளுமையின் சின்னமாக அமைந்திருப்பதும் கோலாகும். அதனால் கோல் கை கொண்டு வாழ் என்று பாரதி குறிப்பிடுகிறார்.

24. கெளவியதை விடேல்

ஒன்றைப் பிடித்தால் விட்டுவிடக் கூடாது என்னு பொருளில் கெளவியதை விடேல் என்று பாரதி கூறியுள்ளார். கையில் பிடிப்பதையும் வாயால் பிடித்துக் கொள்வதையும் கெளவுதல் என்று கூறலாம். மனதால் கொள்வதையும் கெளவுதல் என்று கூறுலாம்.

சிங்கம், புலி, பூனை, நாய் முதலியவை பிடிப்பதைக் கெளவுதல் என்று கூறுகிறார்கள். மனிதனுக்கும் கெளவுதல் இருக்கிறது.

ஒரு வேலையைச் செய்வதில் விடாப்பிடியாகச் செய்வதும், பிடிவாதமாக விடாமுயற்சியுடன் செய்வது என்பதெல்லாம், கெள வியதை விடேல் என்பதுடன் சேர்ந்ததாகும். குழந்தைகளுக்குப் பொதுவாக பிடிவாதம் இருக்கும். அதை பாரதி ஆதரிப்பதாகக் கூறலாம்.