பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5Ꮾ பாரதியின்-புதிய-ஆத்திசூடி_0

மோர்ந்தளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் நம்பரும் திறலோ டொரு பாணினி ஞானமிதில் இலக்கணம் கண்டதும் இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின் இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும் சேரன்தம்பி சிலம்பை இசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பாரளித்து தர்மம் வளர்த்ததும் பேரருள் சுடர்வாள் கொண்ட சோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும் வீரர் வாழ்த்த மிலேச்சர் தந்திய கோல் விழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும் அன்னயாவும் அறிந்திலர் பாரதத்து ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர் முன்னர்நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்”

என்று தனது கவிதைகளில் குறிப்பிடுகிறார்.

இந்திய நாட்டின் சரித்திரத்தில் தேர்ச்சி கொள்ள வேண்டுமென்றால் கம்பன், காளிதாசன், பாஸ்கரன், பாணினி, சங்கரன், சேரன் தம்பி, வள்ளுவன், பாண்டிய சோழர்கள், அசோகன், சிவாஜி மற்றும் பாரத நாட்டின தலைச்சிறந்த அறிஞர்களும் வீரர்களும் இந்திய மக்களுடன் சேர்ந்து ஆற்றியுள்ள அருஞ்செயல்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்பது பாரதியின் கருத்து.

வரலாறு என்பது என்ன என்பது பற்றி பல கருத்துகள் நிலவி வருகின்றன. அந்தந்தக் கருதுக்களின் வழியில் வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

ஒரு நாட்டின் வரலாறு என்றால் அந்த நாட்டின் அரசியல்

அதிகாரத்தில் இருந்தவர்கள், அதாவது அரசர்கள், அந்த அரசர்களுக்குத் துணைபுரிந்தவர்கள், அமைச்சர்கள், தளபதிகள்