பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

மராட்டிய மன்னர்கள், முஸ்லிம் மன்னர்கள் முதலியோர்களின் ஆட்சிகள் அவர்களின் வம்சாவளி அரசர்கள், அவர்கள் நடத்திய போர்கள் முதலியவை பற்றி மட்டுமல்லாமல் நமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார, கலாசார வளர்ச்சி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பகுதிகள் சாகுபடியின் கீழ் கொண்டு வந்தது. கட்டப்பட்ட அணைகள், வெட்டப்பட்ட கால்வாய்கள் ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள், கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோவில்கள், அழகிய கோபுரங்கள் உருவாக்கப்பட்ட கலைச் செல்வங்கள், பல தொழில்கள், கைவினைத் தொழில்கள் வாணிபம், போக்குவரத்து, சிறப்பு மிக்க இலக்கியங்கள், பொருளியல் நூல்கள், வானசாத்திரம், கணிதம், இலக்கணம், தத்துவ சாத்திரங்கள் வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், சங்க நூல்கள், பக்தி இலக்கியம், அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய பல இலக்கியங்கள்.

இந்திய நாட்டின் பல்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற கருத்துப் போராட்டங்கள், கொடுங்கோல் மன்னர்களுக்கு எதிராக நடைபெற்ற எழுச்சிகள், இவைகளில் மக்களின் பங்கு பாத்திரம் பற்றிய படிப்பினைகள், இதர விவரங்கள் பற்றியும் விரிவாக அறியப்பட வேண்டும்.

பின்னர் ஏற்பட்ட ஆங்கிலேயர் வாணிகம், அவர்கள் நடத்திய படுகொலைப் போர்கள், ஆக்கிரமிப்புகள் அவர்களுடைய ஆட்சியில் நடந்த பல கொடுமைகள், அவைகளுக்கு எதிராக மக்கள் நடத்திய பல கிளர்ச்சிகள், பல்வேறு பகுதி மக்களும், பல்வேறு அரசியல் அமைப்புகள் இதர மக்கள் அமைப்புகளும் அன்னிய ஆட்சிக்கு எதிராக நடத்திய வீரமிக்க விடுதலைப் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் விரிவாக அறியப்பட வேண்டும்.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, அதன் நிர்வாகிகள், பிரிட்டிஷ் கவர்னர்கள், கவர்னர் ஜெனரல்கள், பிரிட்டிஷ் பார்லிமென்ட் ஆட்சி, பின்னர் அவர்கள் நடத்திய வட்ட மேஜை மாநாடுகள் அரைகுறை அரசியல் சீர்திருத்தங்கள், அவர்கள் கொண்டு வந்த கல்விமுறை சட்டங்கள் நீதி முறை ஆகியவை மட்டுமே இந்தியாவின் வரலாறாகி விட முடியாது.