பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

விவரங்கள் அமையும் அவைகள் ஒரு சார்பாக இருந்தாலும் சில நேரங்களில் பழங்குப்பையாக இருந்தாலும் அதிலுள்ள பகுதி உண்மையான விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.

இதுவரையிலும் நிலையில் இருந்துள்ள சமுதாயங்களின் வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகும் என்னும் ஒரு கருத்தும் இன்றைய வரலாற்றுத் துறை அறிஞர்களுக்கு இடையில் நிலவியுள்ளது. இந்தக் கருத்து இக் காலத்தில் பெருமளவில் ஏற்றும் மறுத்தும் விவாதிக்கப்படுகின்றன, அதர்மத்திற்கும் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் இடையிலான போராட்டத்தின் வரலாறே சமுதாயத்தின் வரலாறாக இருந்திருக்கிறது என்னும் கருத்து பாரதிக்கு நெருக்கமாக இருக்கலாம். ஆயினும் இக்கருத்துக்கள் சமுதாயத்தின் வளர்ச்சிப் போக்கின் விவரங்களில் இருந்து அறியப்பட வேண்டியதாகும்.

ஐரோப்பிய சமுதாயத்தின் வரலாறு, ஆண்டான் - அடிமை வர்க்கங்கள், நிலப்பிரபுக்கள் - குடியானவர்கள், முதலாளிகள் - தொழிலாளர்கள் என்று வர்க்கங்களாகவும் அவைகளின் துணை வர்க்கங்களாகவும் பிரிந்து நின்றிருந்து அவைகளுக்கு இடையில் நடைபெற்ற போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தப் போராட்டங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் போராடும் வர்க்கங்களின் பொது நாசத்திலும், சமுதாய முழுவதினுடைய மாற்றங்களிலும் போய் முடிந்திருக்கின்றன.

பழைய வர்க்கங்கள் மறைந்து புதிய வர்க்கங்கள் தோன்றியிருக்கின்றன. இவ்வர்க்கங்கள், சமுதாய உற்பத்தி முறையிலும் சமுதாய வளர்ச்சியிலும் தேக்கத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. இந்த வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமானது அரசியல், பொருளாதாரம், கலாசாரம், சித்தாந்தம் ஆகிய சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்திருப்பதையும் காண முடிகிறது.