பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)ே அ.சீனிவாசன் 61

இந்தியாவிலும் புராதன சமுதாயத்திலிருந்து வளர்ச்சி பெற்றபோது, குலப்பிரிவுகளும் வர்ணப் பிரிவுகளும் அற்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவுகள் பின்னர் சாதிப் பிரிவுகள என்றும் உறுதிப்பட்டு நிலை பெற்றிருக்கின்றன. அடுத்து தொடர்ச்சியான சமுதாய வளர்ச்சியில் வர்க்கப் பிரிவுகளும் சாதிப் பிரிவுகளும் இணைந்து ஒன்றையொன்று மேல்படுத்திக் தொடர்ந்து வந்துள்ளதைக் காண்கிறோம். சாதிகளுக்கு இடையிலும், வரி க்கங்களுக்கு இடையிலும் தொடர்ச்சியாக சமுதாயப் போராட்டங்களாக இந்திய சமுதாயத்தில் நிகழ்ந்துள்ளன. பரசுராமரின் கலகம், வசிஷ்டர்-விஸ்வாமித்திரர் மோதலும் ம ன் பாடும், புத்த, சமண இயக்கங்களின் வெற்றியும் சாதனைகளும் மத்திய காலத்தில் அரசர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் பக்தி இயக்கம், அதனால் ஏற்பட்ட சமுதாய மாற்றம் முதலியன நமது நாட்டின் வரலாற்றின் பகுதிகளாகும்.

நமது நாட்டின் மீது தொடர்ச்சியாக ஏற்பட்ட ப ையெடுப்புகளும் போர்களும் சேதங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. கடைசியாக நிகழ்ந்த பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பும் ஆட்சியும் நாட்டின் வளர்ச்சியை பெரும் அளவில் தடுத்துக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆதிக்கத்தால் இந்திய நாட்டின் பழைய அமைப்பு முறைகளில் கடும் சேதங்களும் அதே சமயத்தில் புதிய பொருளாதார அரசியல் சட்டநீதி கல்வி, அமைப்பு முறைகளும் தோன்றின.

தேசிய விடுதலை இயக்கம் என்னும் புதிய ஆதர்சம் தோன்றி நாட்டு மக்களுடைய பொது ஜனநாயக இயக்கமாக அரசியல் பொருளாதார சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றி வளர்ந்து நாடு விடுதலை பெற்று சுதந்திர இந்தியா மலர்ந்தது.

"ஆதியில் அந்தணர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதாவது மேல்தட்டு படித்த கூட்டம் பிளாட்டோ கூறியுள்ளபடியான தத்துவஞானி - அரசன் ஆட்சி நடத்தினர். அதன்பின்னர்