பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

சத்திரியர்கள், வல்லவர்கள், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் வகையில் பலசாலிகள் ஆட்சிக்கு வந்தனர். இப்போது வைசியர்கள் வணிகர்கள் (முதலாளிகள் எனவும் கூறலாம்) ஆட்சி நடத்துகிறார்கள். எதிர்காலத்தில் சூத்திரர்களின் ஆட்சி அமையும், அடித்தட்டு மக்களின் ஆட்சி அமையும் என்று விவேகானந்தர்

குறிப்பிட்டதை நினைவு கொள்ளலாம்.

எனவே சாதி முறையினால் ஏற்பட்ட பாகுபாடுகள் வேறுபாடுகள், கொடுமைகள், இழிவுகள் ஆகியவைகளை எதிர்த்து இந்திய சமுதாயத்தில் நடந்துள்ள போராட்டங்களும் சமுதாயப் போராட்டங்களின் பகுதியேயாகும் என்பதை அனுபவத்தில் காண்கிறோம்.

மனிதகுல வரலாறு என்பது அதன் அடிநாதமாக உள்ளது என்பது மனிதன் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு அவன் நடத்தியுள்ள உற்பத்தி முறையின் வளர்ச்சியேயாகும்.

மனிதன் தனது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, பொழுதுபோக்கு, ஆடல், பாடல், விளையாட்டு, கொவில், குளம் முதலியவைகளுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்வதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளின் செயல்பாடுகளின் வரலாறு மனித வரலாற்றின் அடிப்படையாகும். அதுவே சமுதாயத்தின் அரசியல் பொருளாதார ஆன்மீக அடிப்படையாகும். அந்த சமுதாய அடிப்படையைப் பாதுகாத்துக் கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவும் மனிதன் உருவாக்கிக் கொண்ட அரசியல் கலை, இலக்கியம், தத்துவஞானம் சட்டம், நீதி, அரசியல் நிர்வாக அமைப்புகள், கருத்துக்கள், சாதி, மதம் முதலிய மேல் கட்டுமானங்களாகும்.

இந்த அடிப்படையும் மேல் கட்டுமானமும் வளர்ச்சியடைந்து கொண்டும், மாறிக் கொண்டும் வந்திருக்கின்றன. இந்த வளர்ச்சிக்கு இடையூறாக ஏற்படும் அனைத்துத் தடைகளையும், அந்தத் தடைகளை உண்டாக்கிய சக்திகளையும், நீக்கிவிட்டு மக்கள் புதிய நிலை க்கு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.