பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[...) அ.சீனிவாசன் 65

வேண்டும் என்று கண்ணன் பார்த்தனுக்கு எடுத்துக் கூறும் போது. "நீ போர்க்களத்தில் வெற்றி பெற்றால் உலகை, இந்த பூமியை ஆள்வாய், நீ போர்க்களத்தில் இறந்து விட்டால் வீரசுவர்க்கம் அ ைவாய், எனவே போர் செய்வாயாக’ என்று கூறவதாக கீதை குறிப்பிடுகிறது.

விடுதலைப் போராட்ட காலத்தில் நாட்டு விடுதலைக்காக சாவுக்கும் அஞ்சாமல் துணிந்து நிற்கும்படி தேசத் தலைவர்கள் நமக்கு எடுத்துக் கூறினார்கள். இன்று சமுதாயத்தில் கரண்டலையும் கொடுமைகளையும் ஒழித்து, மனித குலம் சபிட்சம் அடைவதற்கான போராட்டத்தில் நாம் எதற்கும் அஞ்சாமல் நிற்க வேண்டும் என்பதை பாரதியின் சொற்கள் நினைவூட்டுகின்றன.

27. சிதையா நெஞ்சு கொள்

நாம் எந்த செயலில் ஈடுபட்டாலும் நமது உள்ளத்தில் ாஞ்சலமும் ஊசலாட்டமும் ஏற்படக்கூடாது. நெஞ்சுறுதி வேண்டும். நமது உள்ளம் சிதையாமல் இருக்க வேண்டும். நாம் ஒரு வேலையைச் செய்யும் போது நமக்கு எத்தனை கஷ்டங்கள் 1ற்பட்டாலும் அதைக் கண்டு கலங்கக் கூடாது. உறுதி குலையக்கூடாது.

இன்னல் வந்திடும் போது அதற்கு அஞ்சாமல் இருக்க வேண்டும் என்று பாரதி கூறுகிறார்.

விடுதலைப் போராட்ட காலத்தில் தேச பக்தர்களுக்கு பல இன்னல்களும் தொல்லைகளும் ஏற்பட்டன. அதைக் கண்டு அவர்கள் மனம் உடையாமல் உறுதியாக இருந்தார்கள்.

நமது குடும்பத்தில் நமக்குப் பல தொல்லைகளும் கஷ்டங்களும் ஏற்படலாம். வாழ்க்கையிலும் பல தொல்லைகளும் தோல்விகளும் ஏற்படலாம். அவைகளைக் கண்டெல்லாம் நாம் மனம் உடைந்து போகக்கூடாது.

நாம் ஒரு தொழிலைக் தொடங்குகிறோம். வீடு கட்டுகிறோம். ஒரு கல்வி நிலையத்தைத் தொடங்கு கிறோம். மக்கள் | M ன் களுக்காக பல முயற்சிகளை எடுக் கிறோம். பல