பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 சீனிவாசன். هید)

குடும்பப் பொறுப்புகள் என்று கூறும்போது, நமது குழந்தைகள் நமது வயதான பெற்றோர்கள், உடன்பிறந்த இளையோர்கள் முதலியவர்கள் பால் நமக்கு சில பொறுப்புகளும் கடமைகளும் ஏற்படுகின்றன.

அதேபோல் நமது நாட்டின்பாலும் நமது சமுதாயத்தின்பாலும் நாம் செய்யும் தொழில் மூலம் பொறுப்புகளும் கடமைகளும் அற்படுகின்றன. உதாரணமாக ஒருவர் ஆசிரியராகப் பள்ளியில் பணியாற்றுகிறார் என்றால் அவருக்கு அவரிடம் பயிலும் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்ட வேண்டியது மிகப்பெரிய முக்கியமான கடமையும் பொறுப்பும் சுமையுமாகும். அதைக் கண்டு அவர் பின்வாங்கவோ புறக்கணிக்கவோ பொறுப்புகளைக் குறைத்துக் கொள்ளவோ தட்டிக் கழிக்கவோ கூடாது.

அதேபோல ஒரு மாணவன் படிக்கும் போது அவருடைய பாடங்களையோ புத்தகங்களையோ ஆசிரியர்களின் போதனைகளையோ ஒரு தலைச் சுமையாக பாரமாகக் கருதக்கூடாது. மாணவப் பருவத்தில் அவன் கற்றுக் கொள்ள வேண்டுடிய அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும். அது அவருடைய கடமையும் பொறுப்புமாகும். அதில் குறை

  • I пgbl.

ஒருவர் ஒரு நிறுவனத்திற்கு ஒரு அமைப்பிற்கு, அல்லது அரசு நிர்வாகத் துறையில் அல்லது நாட்டைக் காக்கும் படைத்தொழிலில் பொறுப்பு வகித்தால் அவருக்கு முன்புள்ள சமுதாயக் கடமையும் நாட்டுக் கடமையும் முதலிடம் பெற வேண்டும். அந்தச் சுமைகளை ஏற்றுச் செயல்படுவதில் நாம் இணைத்துவிடக்கூடாது. குறைந்துவிடக்கூடாது எனபதை நமது குழந்தைகளுக்கு நினைவுகூர்ந்து பாரதி அறிவுறுத்துகிறார்.

30. சூரரைப் போற்று

எந்த ஒரு காரியத்தையும் வீரத்துடன், தீரத்துடன் திறம்பட செய்து முடிப்பவர்களைப் பாராட்ட வேண்டும் பலரும் செய்ய