பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 69

மகாபாரதக் கதையில் கர்ணன் தனது நண்பனுக்கு, போரில் துணையாக நின்று அதே சமயத்தில் தனக்கென தனிச்சிறப்புகளையும் கொண்டு போரில் சூரனாக விளங்குகிறான். கடோத்கஜனும் அபிமன்யு வும் பாரதப் போரில் தங்கள் (,ரத்தனத்தைக் காட்டியுள்ளனர்.

இராமயணப் போர்க்கதையில் இந்திரஜித்தும் அதிகாயனும் தங்கள் தந்தைக்காக குலமானத்தைக் காக்க சூரத்தனத்தைக் காட்டுகிறார்கள். சூரத்தனத்திற்கு இலக்கணமாக அதிகாயசூரன் என்று அடைமொழியிட்டு குறிப்பிடுவது வழக்கம். அதிகாயனின் (,ரத்தனத்தை இராமனே போற்றுகிறான்.

பல்வேறு சூழ்ச்சிகள் சாகசங்கள், ஜாலவித்தைகள் வீரதீரச் செயல்களை சூரபத்மன் முருகனுடன் நடத்திய போரில் காட்டுகிறான், முருகனே சூரபத்னை வென்ற பின்னர் அவனைப் பேற்றி அவனை இரண்டாகப் பிளந்து ஒரு பாதியை தனது கொடியில் சேவலாகவும் மறுபாதியை தனது வாகனமான மயிலாகவும் வைத்துப் பாராட்டுகிறான்.

கண்ணன் ஆயர்பாடியில் செய்த அருஞ்செயல்கள் எல்லாம் (,ானுக்குரிய செயல்களாகும், சத்திரியர்களும், பிராமணர்களும் சமமான வர்கள் என்று காட்ட பலமான தவங்களையும் துணிச்சலான பல காரியங்களையும் சூரத்தனமாகச் செய்து விஸ்வாமித்திரன் பிரம்மரிஷி என்னும் பட்டம் பெற்றான்.

ஒரு ஊரில், ஒரு நாட்டில், ஒரு கொடியவன், ஒரு கொடுங்கோலன், ஒரு அரக்கன், ஒரு காட்டில் கொடிய மிருகம், மக்களுக்குப் பல கொடுமைகளையும் தொல்லைகளையும் தும் பங்களையும் கொடுக்கும் போது அவர்களுக்கு எதிராகப் பேllட்டு வெற்றி காணும் வீரர்களை மக்கள் சூரர்கள் எனப் பாட்டிப் போற்றுகிறார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்த ஆட்சியாளர்கள் | க்திய கொடுமைகளுக்கு எதிராக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு போராடிய வீரர்களைப் பாராட்டு கிறோம்.