பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பாரதியின் புதிய ஆத்திசூடி O

ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து மத்திய சட்டமன்றத்தில் குண்டுவீசி துக்கு மேடை ஏறிய பகத்சிங்கையும் அவரின் தோழர்களையும் தீரர்கள், சூரர்கள் எனப் போற்றுகிறோம்.

துாத்துக்குடியில் வ.உ.சிதம்பரமும், சுப்பிரமணிய சிவாவும் நடத்திய போரட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையை ஏவிவிட்ட ஆஷ் என்னும் ஆங்கிலேயனை மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொன்று தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட வாஞ்சிநாதனை தீரன் எனப் பாராட்டுகிறோம். இந்த வகையில் நமது நாட்டில் எத்தனையோ சூரர்கள் வாழ்ந்து காட்டி நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

அத்தகைய சூரர்களை நாம் பாராட்டிப் போற்ற வேண்டும் என்பதை பாரதி நினைவுப்படுத்துகிறார்.

31. செய்வது துணிந்து செய்

ஒன்றைச் செய்வது என்பது அனைவருக்கும் உரிய செயலாகும். அச்செயல் நல்ல செயலாக இருக்க வேண்டும். பிறர்க்கு நன்மை பயக்கும் செயலாக இருக்க வேண்டும். நாம் செய்வதைத் துணிந்து செய்ய வேண்டும்.

'எண்ணித்துணிக கருமம்' என்பது வள்ளுவர் வாக்கு. துணிவு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமானது. ஒரு செயலைச் செய்ய முனைந்து விட்டால், அதில் எத்தனை இடையூறுகளும் கஷ்டங்களும் நேர்ந்தாலும் நாம் துணிவுடன் அக்காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும்.

'துருக மட்டும் இப்பாரத நாட்டிற்கே கொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும் திலகனுடைய நாமத்தைக் கூற வேண்டும்’

என்று பாரதி கூறுகிறார்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் தேசத் தொண்டு என்பது ஒரு துணிவு மிக்க செயலாகும், அன்னிய ஆட்சியார்களால் எல்லாவிதமான தொல்லைகளும் தேசபக்தர்களுக்கு இருந்தன.