பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O. அ.சீனிவாசன் 71

போலிஸ் தொல்லை, சிறைவாசம், சித்திரவதை, தேசப்பிரஷ்டம் முதலிய பல கொடுமைகளையும் தாங்கி நிற்கும் துணிவைக் கொண்டிருந்தனர் நமது தேசபக்தர்கள்.

'பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்...'

என்று உலகில் உள்ள அனைவரும் அனைத்து உயிர்களும் மக்களும் பறவைகளும், விலங்குகளும், பூச்சி, புல், பூண்டு மரங்கள் யாவும் எனது செயலால் இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழவேண்டும் என்று தேவ தேவனை வேண்டுகிறார். பாரதியின் பரந்த உள்ளத்தை நாம் என்றும் மறக்க முடியாது.

சுருதிப் பொருளே வருக துணிவே, கனலே வருக ’’’’

என்று பாடுகிறார்.

'கடமை செய்வீர், நந்தேசத்து விரக் காரிகைக் கனத்திர் துணிவுற்றே ’’

என்று பெண் விடுதலைக்காக நமது நாட்டு மகளிர் எல்லாம் ஒன்று திரண்டு துணிவுடன் தங்கள் கடமைகளைச் செய்ய முன்வர வேண்டும்மென்று பாரதி கூறுகிறார்.

நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்வது நாட்டின் விடுதலை லட்சியங்களுக்காக மக்கள் நலன்களுக்காகப் பாடுபடுவது அதற்கு இடையூறாக உள்ள சக்திகளுக்கு எதிராகப் போராடுவது ஆகிய பணிகளில் நாம் துணிவுடன் பங்கு கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, நாம் வேறு எந்த வேலை செய்தாலும் என்ஜினியர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், தொழிலாளர்கள், விவசாயிகள், கவிஞர்கள், கலைஞர்கள் முதலிய உழைப்பாளர்கள் யாவரும் எந்தப்பணிகளில் ஈடுபட்டாலும் அவைகளை நிறைவேற்றுவதில் துணிவுடன் ஈடுபட வேண்டும். அதையே செய்வது துணிந்து செய்’ என்று பாரதி கூறியுள்ளார். f i