பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fo பாரதியின் புதிய ஆத்திசூடி 0

06. செளரியந் தவறேல்

நாம் சாதாரணமாக நமது உறவினர்களையோ நண்பர்களை யோ வேண்டியவர்களையோ சந்தித்தால் செளகரியம் தானா, சொக்கியமாக இருக்கிறீர்களா என்று கேட்பது வழக்கம். இங்கு சொரியம் என்பது பொதுவாக உடல் நலம் என்று பொருள்படுகிறது, ஆயினும் இதர எல்லா நலன்களும் ஒரளவு நன்றாக இருந்தால் தானே உடல் நலனும் நன்றாக இருக்க (յlթ Ալլո.

எல்லா நலன்களும் என்றால், இன்றைய சமுதாய நாகரிக வளர்ச்சியில் உள்ள வசதிகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் அளவில் உற்பத்தியும் வினியோகமும் சிறப்பாக சீராக இருக்க வேண்டும் என்பதாகும்.

இன்று மனிதனுடைய வாழ்க்கை நலனுக்காக தேவைகள் அதிகரித்து வருகின்றன. அத்தேவைகளை நிறைவேற்றும் அளவிற்கு விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியும் உற்பத்தி வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

எண்ணற்ற வகையான நல்ல ருசியான சத்து நிறைந்த உணவுப்பண்டங்கள் விதவிதமான அழகிய நல்ல தேவையான ஆடைகள் எல்லா விதமான வசதிகளையும் கொண்ட வீடுகள் தொடக்கல்வி முதல் வளர்ச்சியடைந்த பல்கலைக்கல்வி தொழில் நுட்பக் கல்வி, விஞ்ஞானக் கல்வி, ஆய்வுக்கூடங்கள் எண்ணற்ற நூல்கள், அறிவியல் நூல்கள், இலக்கியங்கள், பொழுதுபோக்கு வசதிகள் அறிவியல் பூர்வமான பொழுதுபோக்கு வசதிகள், உயர்ந்த விளையாட்டு வசதிகள், மிக விரைவான போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், அறிவு வளர்ச்சிக்கான விரிவான சாதனங்கள், கணிப்பொறிகள் முதலிய பலவும் இன்று உற்பத்தி செய்யப்பட்டு மக்களின் அன்றாடப் பழக்கத்திற்கு வந்து விட்டன.

ஆயினும் இந்த செளரியங்கள் எல்லாம் எல்லோருக்கும் இன்னும் கிடைக்கவில்லை. அந்த செளரியங்கள் அனைத்தும்