பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 77

அனைவருக்கும் தவறாமல் கிடைக்க வேண்டும். அதற்கான அரசியல், பொருளாதார வர்த்தக, வாணிப அமைப்புகளை உருவாக்க வேண்டும். உற்பத்திப் பெருக்கத்தையும் சீரான வின்யோக முறைகளையும் செயல்படுத்த வேண்டும். அத்தகைய சமுதாயக் குறிக்கோளை வைத்து நாம் முன்செல்ல வேண்டும். லோகாயத நலன்களோடு ஆன்மீக நலன்களையும் இணைத்துப் பேணவேண்டும்.

37. ஞமலி போல் வாழேல்

ஞமலி என்றால் நாய், மனிதன், நாய் போல வழக்கூடாது என்பது பாரதி வாக்கு. நாய்ப்பிறவியும், நாய்ப் பிழைப்பும் மிகவும் கீழானது எனக் கருதப்படுகிறது. நாய் எச்சிலைத் தின்று வாழ்கிறது. அது மிகவும் கீழ்த்தரமானது. மனிதன் எச்சிலைத்

தின்று வாழும் நிலைமை கூடாது.

நாய்க்கு ஏதாவது எலும்புத் துண்டைப் போட்டால் வாலை ஆட்டிக் கொண்டு பின்னால் வரும். அப்படி மனிதன் எலும்புத் துண்டுக்காக அல்லது எச்சில் காசுக்காக யார் பின்னாலும் போகக்கூடாது அது மிகவும் கேவலமான பிழைப்பாகும், அது கூடாது.

நாயை யார் மீதாவது ஏவி விட்டால் பாயும், காரணமில்லாமல் பாயும், அது போல் மனிதன் காரணமின்றி உகப்பிவிட்ட இடத்தில் பாயக்கூடாது. அது அறிவற்ற செயல்.

நாய் மற்றொரு நாயைக் கண்டு விட்டால் போதும் குரைக்கும், சண்டைபோடும், கடிக்கும் மனிதர்கள் பாராவது சண்டை போட்டுக் கோண்டால் என்ன இவர்கள் நாய்களைப் போல் அடித்துக் கொள்கிறார்கள்? என்று கூறுவார்கள். மனிதன் அப்படி வாழக்கூடாது அடித்துக் கொள்ளக்கூடாது. o

'இன்று பாரதத்திடை நாய் போல் ஏற்றமின்றி வாழுவாய் போ, போ, போ'

என்று நாய் போல் ஏற்றமின்றி கீழ்த்தரமான முறையில் வாழும் பாரதத்தை போ, போ, என்று பாரதி கூறுகிறார்.