பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

கம்பனையும், வள்ளுவனையும், இளங்கோவையும் கூட விமர்சனம் செய்யலாம், அவர்களுடைய படைப்புகளுக்கும் விளக்கங்களும் கருத்துக்களும் கூறலாம், எனவே கம்பன், வள்ளுவன், இளங்கோ வழியில் வந்துள்ள பாரதியை, பாரதியின் படைப்புகளை விமர்சனம் செய்யலாம், எவரும் தங்களுடைய பக்குவத்திற்கு ஏற்ற வகையில் பாரதியின் படைப்புகளுக்கு விளக்கமும் விரிவுரையும்

м ([[]ұһвUTTL0.

அதே சமயத்தில் தமிழகத்தில் கம்பனுக்கும், இளங்கோவுக்கும், பதிக்கும் எதிராக சில அவதூறுகளும் கூட கூறப்பட்டு இருக்கின்றன. அக்கூட்டத்தில் சில அறிஞர்களும் அப்பாவிகளும் இருக்கின்றனர். சில சிறு பிள்ளைகளும், கீழோர்களும், பெய்யர்களும், போலிகளும், இருக்கிறார்கள், இருந்துள்ளார்கள்.

பாரதி, தான் வாழ்ந்த காலத்தில் அன்னிய ஆட்சியாளர்களின் அ க்கு முறைகளுக்கும் ஆதிக்கக் காரர்களின் அச்சுறுத்தல்களுக்கும், ாவதிகர்களின் வெறுப்புக்கும் பழமைவாதிகளின் கசப்புக்கும், சில அரை குறைகளின் அவதூறுகளுக்கும் ஆளானவர் என்பதை அனைவரும் அறிவர், அதே சமயத்தில் அவர் தேச பக்தர்களின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும், புரட்சிகர ஜனநாயகச் செயல்வீரர்களின் பெருமதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவராக இருந்தார் என்பதையும் நாம் அறிவோம்.

எண்ணற்ற பலவகைத் தடைகளையும் தாண்டி பாரதியின் பா ப்புகளும் பாடல்களும், கவிதைகளும், கருத்துக்களும் மக்களுக்கு இடையில் பரவின. ஆயினும், பிற்காலத்தில் பாரதியின் புதிய பllாணங்கள் மேலும் அதிகமான அளவில் ஒளிவீசத் தொடங்கிய போது அவருடைய புரட்சிகர ஜனநாயகக் கருத்துக்களும், முற்றிலும் புதிய கருத்து வடிவங்களும் மக்களிடையில் பரவுவதிலும் வேரூன்றுவதிலும் பற்றாக்குறைகள் நீடிப்பதையும் நாம் காண்கிறோம்.

அண்மைக் காலமாக அடித்தட்டு மக்களிடத்திலும், பெண்களிடத்திலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பின் தங்கிய மக்களிடத்திலும் ஏற்பட்டு வரும் புதிய எழுச்சிகளும்,