பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பாரதியின் புதிய ஆத்திசூடி 0_

சத்திரபதி சிவாஜி என்னும் கவிதையில்.

'தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்'

தாய்ப்பிறன் கைப்பட சகிப்பவனாகி நாயென வாழ்வோன் நமரில் இங்குளனோ'

என்று பாரதி குறிப்பிடுகிறார்.

எந்த விதமான மானமும் ரோசமும் இன்றி நாய்போல் கீழ்நிலையில் வாழ்வதைப் பாரதி பல இடங்களிலும் கண்டித்துப் பேசுகிறார்.

கோபம் வந்தால் போடா நாயே என்று திட்டுவார்கள் அவ்வாறு கேவலப்பட்டு மனிதன் வாழக்கூடாது.

நாய் கண்ட இடத்தில்வாய் வைக்கும் அம்மாதிரி நாய்களைக் கண்டவர்களும் விரட்டிபடிப்பார்கள். அப்படிப்பட்ட ஈனவாழ்வு மனிதனுக்கு ஏற்படக்கூடாது.

'குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை

கொள்ளத்தவிசு முண்டோ’’

என்று ஆங்கிலேயன் நம்மைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதாகவும்.

"நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ - பன்றிச்சேய்களோ நீங்கள்மட்டும் மனிதர்களோ - இது நீதமோ, பிடிவாதமோ'

என்ற அந்த ஆங்கிலேய அதிகாரிக்கு இந்திய தேசபக்தன் பதில் கூறுவதாகவும் பாரதி குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

எனவே நமது கவிக்குயில் பாரதி ஞமலியோல் வாழேல்' என்று நமது குழந்தைகளுக்கு போதிக்கிறார்.