பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 81

தேனிக்கள் மலர்களில் சென்று அமர்ந்து அதிலுள்ள தேனை எடுத்து சிறுகச் சிறுக தனது கூடுகளுக்குக் கொண்டு சென்று அக்கூடுகளில் தேனைச் சேமித்து வைக்கிறது. அந்தத் தேனை ராணி ஈயும், ஆண் ஈக்களும் உண்டு தங்கள் இனவிருத்தியைச் செய்கின்றன.

மலர் வண்டுகளோ, மலர்களில் அமர்ந்து மதுவை உண்டு மயக்கத்தில் ரீங்காரத்துடன் இசை பாடுகின்றன. இதைக் கவிஞர்கள் ரசித்து தங்கள் கவிதைகளில் அழகு ததும்ப எடுத்துக் கூறுகிறார்கள்.

தேனிக் களும் வண்டுகளும் தங்கள் வேலைகளை இயல்புணர்விலேயே செய்கின்றன. அவைகளின் இயல்பான தொழிலாக அவை அமைந்திருக்கின்றன. அந்த வேலையை அந்த இயல்பான தொழிலைச் செய்யும் போது அவை மகிழ்ச்சியுடன் செய்கின்றன. அப்பணியில் அவை ஆனந்தமடைகின்றன. அதாவது பெருமகிழ்ச்சியடைகின்றன. ஆட்டபாட்டத்துடன் அந்த வேலையைச் செய்கின்றன. பூக்களை வட்டமிட்டு சுற்றிச் சுற்றி வருகின்றன. ஒரு மலரில் தேனைத் தொட்டு மகிழ்ந்து மறு மலருக்குச் செல்கின்றன.

தேனிக்களும் மலர் வண்டுகளும் மலருக்குள் செல்லும் போது தேனை எடுக்க அதைத் தொடும் போது ஒரு நெகிழ்ச்சி ஏற்படுகிறது. மலர்களில் ஒரு புதிய வளர்ச்சி ஒரு புதிய திண்மை ஏற்படுகிறது. இவ்வாறு இயற்கையில் நிகழும் ஒரு மகத்தான வளர்ச்சிப் பணியில் தேனிக்களும் வண்டுகளும் தனது இயல்பான பணியாகப் பங்கு பெறுகின்றன. இப்பணிகளில் ஈடுபடும் போது அந்த தேனிக்களும் மலர் வண்டுகளும் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன.

நாமும் நமது இயல்பான உணர்வாக நமது இயல்பான செயலாகத் தொழில் செய்ய வேண்டும். எந்தத் தொழிலையும உவந்து செய்ய வேண்டும், மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும். அத்தொழில் செய்வதில் இன்பம் காண வேண்டும்.