பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9-அ.சீனிவாசன் 83

என்றும் நெஞ்சுருகப் பாடுகிறார்.

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி - கிளியே சிறுமையடைவாரடி’

என்றும் நெஞ்சு நெகிழ்ந்து மனமுருகிப் பாடுகிறார். புதிய ருஷ்யா என்னும் பாடலில் பாரதி.

இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம், இவ்வாறங்கே செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறமாகித் திiந்த போதில் அம்மை மனம் கனிந்திட்டாள்’’

என்று அம்மையின் இரக்கத்தைப் பற்றி பாரதி கூறும் போது கவிஞரின் உள்ளத்தின் உருக்கத்தைக் காட்டுகிறது.

'நாட்டை நினைப்பாரோ என்று, 'வீட்டை நினைப்பாரோ என்றும் 'அவர் விம்மி, விம்மி, விம்மி, விம்மி விம்மியழுங்குரல், கேட்டிருப்பாய் காற்றே’’

என்றும் அன்னிய கரும்புத் தோட்டங்களில் நமது நாட்டு மக்கள் படும் துன்ப துயரங்களைக் கேட்டு பாரதியின் நெஞ்சு நெகிழ்கிறது. எனவே நெஞ்சு நெகிழ்ச்சி இளகிய மனம் இரக்கக் குணம் நமக்கு அருள வேண்டும் என்று பாரதி கோருகிறார்.

41. ஞேயங் காத்தல் செய்

ளுேயம் என்றால் நேயம், நட்பு, தோழமை என்று பொருள்படும், நட்பைக் காக்க வேண்டும். நட்பு புனிதமானது, மனிதனுக்கு மனிதன் நட்பை வளர்க்க வேண்டும். ஒரு மனிதனுக்கு நட்பு என்பது மிகவும் அவசியமான பண்பாகும். ஒருவருடைய நல்ல பண்புகளையும் குணங்களையும் அறிந்து கொள்வதற்கு உன் நண்பர்கள் யார் என்று கேட்பார்கள். நல்ல நண்பர்கள் நற்பேறாகும், நண்பர்கள் என்றால் பரஸ்பரம் உதவி