பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பெரியவர்களுக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக கலைக்களஞ்சியம் வெளியிட்டதுபோல, குழந்தைகளுக்காகவும் கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகள் வெளியிட்டார். தமிழ் வளர்ச்சிக்காகவே தம் வாழ்நாட்களைப் பயன் படுத்தி விரும் பேராசிரியர் திரு. பெரியசாமித் துரன் சிறந்த கவிஞர், நல்ல எழுத்தாளர், காந்தியவாதி, கொங்கு நாடு தந்த தமிழ் அறிஞர். மாணவப் பருவத்தில் பூத்த அவருடைய பாரதி பணி இப்பொழுது வளர்ந்து மணம் வீசுகிறது. பேன்மேலும் இடைவிட்ாது அவர் பாரதியை ஆய்ந்து வருகிரு.ர். தம்முடைய நீண்ட நாள் அனுபவத்துடன் பாரதியின் நூல்களைப் பகுத்தும், தொகுத்தும் வெளியிடும் பணியில் இப்போது ஈடுபட்டிருக்கிரு.ர். மகாகவியின் மணிவாக்குகளைப் பன்முகநோக்கில் ஆராய்ந்து, பற்பல தலைப்புகளில் நூல்களாக வெளியிட்டு வருகிரு.ர். பாரதியும் உலகமும் என்ற தலைப்பில் பாரதியாரின் பாடல்களையும், கட்டுரைகளையும் இந்த நூலில் விரித்து வெளியிட்டிருக்கிரு.ர். இன்றைக்கு உலகில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் பற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி பாரதியார் சிந்தித்து, அவைகளைத் தீர்ப்பதற்குத் தக்க வழிகளையும் காட்டியிருக்கிரு.ர். அதைப் படிக்கும்போது அவருடைய தீர்க்க தரிசனத்தை எண்ணி வியக்கவேண்டி இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் எல்லாம் இன்னும் எழுத்திலேயே இருப்பதை எண்ணி ஏங்கவும் வேண்டி இருக்கிறது. திரு. பெரியசாமித் துாரன் அவர்கள் தாம் வெளியிடும் பாரதியின் நூல்களின் ஒவ்வொரு தொகுப்பிலும் சிறப்பான ஆய்வுக் கட்டுரைபோல ஒரு முன்னுரை மட்டும் எழுதியிருக் கிரு.ர். இன்று பெரியசாமித் தூரன் அவர்களுக்கு மகாகவி பாரதியாரின் எழுத்துக்களைத் திறய்ைவு செய்யும் ஆற்றலும் அனுபவமும் நிறைய இருக்கிற்து. ஆகவே இனி வரும் பாரதியின் நூல்களில் முன்னுரையுடன் மட்டும் இல்லாமல், பாரதியின் க ட் டு ைர க ளை யு ம் கவிதைகளையும் பற்றித் தன்னுடைய ஆய்வுக் கருத்துக்களையும் ஆங்காங்கே அவர் கொடுத்தால், எதிர்காலத்தில் இலக்கியத் திறய்ைவு செய்யும்