பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. இயல்புடையதென்று கருத வழியில்லை. சமீபத்தில் நடந்த இெம்ாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரே அடியாகக் குறைந்துபோய் மஹாபலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் கூட்டு வாழ்க் கைக் குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்ருே ராகி நிற்கின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்திலே ருஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடைமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த அரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளை களும் ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டாகும். லெனின் வழி சரியான வழியில்லை. முக்கியமாக நாம் இந்தி யாவிலே இருக்கிருே மாதலால், இந்தியாவின் ஸாத்யா ஸாத்யங்களைக் கருதியே நாம் யோஜனை செய்யவேண்டும். முதலாவது, இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும் முதலாளி களும் ஐரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குருர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடைமை களைப் பிடுங்க வேண்டுமென்ருல் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்பவும் மாட் டார்கள். எனவே கொள்ளைகளும் கொலைகளும் சண்டை களும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத்தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும். செல்வர்களுடைய உடை மைகளை பலாத்காரமாகப் பறித்துக்கொள்ள முயலுதல் இந்நாட்டிலே, நான் மேற்கூறியபடி, பொருந்தவும் செய்யாது; ஸாத்தியமும் இல்லை. ஆனால், கோடிக்கான ஜனங்கள் வயிறு நிறைய உணவு கிடைக்குமென்று நிச்சயமில்லாமலும், லக்ஷக்கணக்கான