பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 பேரும் ஆகார விஷயத்தில் ஒருவித நிச்சயமில்லாமையால் படும் கஷ்டங்களும் அதனின்றும் உங்களுக்குள் ஏற்படும் போராட்டங்களும் எங்களையும் சூழ்ந்து தீராத துன்பத்துக்கு உள்ளாக்குகின்றன. நாங்கள் பொருளுடைமை விஷயத் தில் மாத்திரம் உங்களின்றும் வேறுபட்டிருப்பினும், மற்றெல்லா அம்சங்களிலும் உங்களைப் போன்ற மனிதர் களே; ஆதலாலும், உங்களுடனே எப்போதும் ஊடாடிப் பழகுவதும் விவஹரிப்பதும் எங்களுக்கு மிகவும் இன்றி யமையாதாதலாலும், நீங்கள் தீராத வறுமை நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கையில் நாங்கள் மாத்திரம் சந்தோஷமாக இருத்தல் சாத்தியப்படவில்லை. எங்க ளுடைய காரியங்களெல்லாம் உங்களாலே ஆகவேண்டி யிருக்கிறது. எங்களுக்கு உங்களைத் தவிர வேறு கதியில்லை. உங்களுடைய வறுமைத் தீ எங்களை நானவிதங்களிலும் சாபம் போல எரிக்கிறது. எங்களுக்குள் சிறிதேனும் ஒற்றுமை யில்லாமல் செய்துவருகிறது. எங்களுக்குள் மேன்மேலும் பொருமையை வளர்க்கிறது. பூமி எல்லோருக் கும் பொதுவான தாய் போலாகும். அதில், நாங்கள் மாத்திரம் உரிமை கொண்டாடுதல் அநியாயம் என்று எங்களுக்கு அர்த்தமாகின்றது. அதனின்றும் பூர்விக காலம் முதல் பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் சொத்தை, ருஷ்யா முதலிய தேசங்களில் நடப்பதுபோல், நீங்கள் பலாத்காரமாக எங்களைக் கொன்றும் சிறையி லிட்டும் எங்களிடமிருந்து பறித்துக் கொள்வது நியாயம் இல்லை. ஏனென்ருல், உடைமை பொது நாகரீகத்திற்கு ஹேதுவாகும். எந்தக் காரணம் பற்றியும் கொள்ளே யிடுவது சரியில்லை. நிலமில்லாத நீங்கள் எங்களுடைய நிலத்தைக் கொள்ளையிட்டுப் பறித்துக்கொள்ளலாமெனில், துணியில்லாதவர்கள் உங்களுடைய துணிகளைப் பறித்துக் கொள்ளலாமன்ருே? வீடில்லாதவர்கள் பிறர் வீடுகளைக்