பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 கிருேம். அதாவது, எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி 'தொழில் நிர்வாக சங்கம்' என்ருெரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த் தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு. பொன் முதலியன சம்பந்தமாகிய நான வகைப்பட்ட கைத்தொழிகள்-இவை இந்தக் கிராமத் துக்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத் தொழில்களில் இன்னின்ன தொழிலிற்கு இன்னர் தகுதியுடையவர் என்றும் மேற்படி தொழில் நிர்வாக சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள். அந்தப்படி கிராமத் திலுள்ள நாம் அத்தனை பேரும் தொழில் செய்யவேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தக்கபடியாக, ஆண் பெண் குழந்தை முதலியோர், இளைஞர் அத்தனை பேரினும் ஒருவர் தவருமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிருேம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவறமாட்டோம். இந்தப் படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வசந்நிதியில் எங்கள் குழந்தைகளின்மேல் ஆணையிட்டு பிரதிக்னே செய்து கொடுக்கிருேம். இங்ங்னம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தை எங்களில் முக்யஸ்தர் கை எழுத்திட்டு செப்புப் ப ட் டை ய ம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிருேம். இங்ங்னம் பிரதிக்னே செய்து இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப் படு மாயின், கிராமத்தில் வறுமையாவது அதைக் காட்டிலும் கொடிதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும் ஏற்பட்டு, அற்பாயுள், நோய் முதலிய பிசாசுகளின் பயந்தொலைந்து, பரிபூர்ண rேமம் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து, பின்னர் அதனை உலகத்தாரெல் லாரும் கைக்கொண்டு நன்மை யடைவார்கள். தமிழ்