பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நாட்டு மக்களே, இங்ங்னம் உலகத்தில் வறுமையைத் தீர்க்கும் பெருந் தர்மத்தில் வழிகாட்டுவோராக நிற்கும் மஹிமை உங்களைச் சார்வதாகுக. 26. பழைய உலகம் இந்த உலகம் மிகப் பழமையானது. இதன் வடிவம் புதிதாகத் தோன்றும். இயற்கை பழமை; தனி வேப்பமரம் சாகும்; ஒற்றை வேப்பமரம் இறக்கும்; வேம்புக்குலம் எந் நாளுமுண்டு. பூமியுள்ளவரை வெயில் என்றைக்கும் இப்படி அடிக்கும். மழை, காற்று, பிறப்பு, வளர்ப்பு, நோய், தீர்வு, இன்பம், கட்டு, விடுதலை, தீமை, இன்பம், துன்பம், பக்தி, மறதி, நரைப்பு, துயரம், கலக்கம்எல்லாம் எக்காலத்திலுமுண்டு. கருவிகள் மாறுபடுகின்றன; இயற்கை செல்கின்றது. ஏன் சொல்லுகிறேன், தெரியுமா? நமக்கெல்லாம் தெரியா மல் ஆகாசத்திலிருந்து புதிய நாகரீகம் ஒன்று குதித்திருப் பதாகப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் சொல்லிக் கொள்ளு கிருர்கள். நான் அதை நம்பவில்லை. உலகமே பழைய உலகம். ஏழை பாடு எப்போதும் கஷ்டம். பணக்காரனுக்குப் பல வித செளக்கியங்களுண்டு. கோயில் காத்தவனுக்குப் பஞ்சமில்லை. சாமிகள், முக்கால்வாசிக்குக் குறையாமல், பாதி கல், பாதி சாமி. முழுச்சாமி இருந்து கோயில் நடத் தினல், உடனே கிருதயுகம் பிறந்துவிடாதா? எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் இதே கதை தான் நடந்து வருகிறது. எவன் கை ஏறியிருக்கிறதோ அவன் பாடு கோலாஹலம். ஏழைக்குக் கஷ்டம்.