பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 பணக்காரன்-ஏழை என்ற பிரிவு முன் காலத்தில் எப்படி உண்டாயிற்று? குடி, படை என்ற இரண்டாக மனித ஜாதி ஏன் பிரிந்தது? எல்லாரும் ஒன்றுகூடி உழுது பயிரிட்டுப் பிழைக்கும் கிராமத்தில் வேற்றுமை எந்தக் காரணத்தினல் வந்தது? இவை யெல்லாம் எஜமானன் விசாரணைகள். இந்த நிமிஷம் ஸெளகர்யமில்லை. ஏழை பணக்காரன் விஷயத்தை மாத்திரம் இப்போது கருது வோம். ஒரு செட்டி வியாபாரத்தில் ஏழையாய் நொந்து போய்த் தனது வீட்டுப் பஞ்சாங்கத்தையரிடம் பணக் காரணுவதற்கு என்ன செய்யலாம்? என்று கேட்டான். நவ க்ரஹபூஜை நடத்தவேண்டும் என்று அய்யர் சொன்னன். எவ்வளவு பணம் செலவாகுமென்று செட்டி கேட்டான். பத்துப் பொன்னகுமென்று பார்ப்பான் சொன்னன். அதற் குச் செட்டி சொல்லுகிருன்:-'என்னிடம் இப்போது கொழும்புக்காசு, தென்னைமரம் போட்டது, ஒற்றைக் காசுக்கூடக் கிடையாது. இந்த நிலைமையில் என்ன செய்தால் பணம் கிடைக்குமென்று உம்முடைய சாஸ் திரம் பேசுகிறது. அதைச் சொல்லும்' என்ருன். அப்போது பார்ப்பான் சொன்னன்-'நீ போன ஜன்மத்தில் பிராமணருக்கு நல்ல தானங்கள் செய்திருக்க மாட்டாய். அதனால் இந்த ஜன்மத்தில் உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. உனக்குப் பிராயச்சித்தம் நம்முடைய சாஸ்திரத்தில் கிடையாது. இந்த ஜன்மத்தில் இனியேனும் புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிறவியில் உனக்குச் செல்வமுண்டாகலாம்.' இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்கு ரஸ்ப் படவில்லை. எனக்கும் பயனுடையதாகத் தோன்ற வில்லை. அடுத்த ஜன்மத்தில் நான் மற்ருெரு மனிதனுகப்