பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பிறந்து வாழ்கையிலே செல்வமுண்டானல், இப்போதுள்ள எனக்கு எவ்விதமான லாபமும் இல்லை. அதைப்பற்றி எனக்கு அதிக சிரத்தை யில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவதுதான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு. எவ்விதமான மிருக பrயும் கூட்டம் கூடி ககதி கட்டித் தன் குலத்தைத் தானே அழிப்பது வழக்கமென்று தோன்றவில்லை. மனித ஜந்து ஒன்றுக்கே இவ்வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஹோமர் கால முதல் கான்ஸ்டண்டைன் ராஜா காலம் வரையிலும் யவன தேசத்தில் போர் நிற்கவில்லை. புயற் காற்றடித்த இரவிலே கூடக் களவு நிற்கவில்லை. தீமை எக்காலத்திலுமுண்டு. விஷத்துக்கு மாற்றும், நோய்க்குத் தீர்வும், மிடிமைக்குச் செல்வமும், மடமைக்குக் கல்வியும் எக்காலத்திலும் தேடலாம். தேடவேண்டுமானல், அதற்கு உபாயங்களும் எல்லாக் காலத்திலும் ஒன்ருகவே யிருப்பதன்றி மாறுபடுவ தில்லை. மனிதர் கருவிகளையே மாற்றுகின்றனர். மற்றப்படி பழமையை விடாமல் நடத்தி வருகின்ருர்கள். ஒரு வியாபாரத்தில் ஒரு லாபம் கிடைக்கவேண்டுமா ல்ை, ஒரேடியாக ஸூர்ய மண்டலத்துக்குத் தாவிப்போக முடியாது. பழைய வழக்கப்படி மெதுவாக ஒவ்வோர் அடி யாகத்தான் போகவேண்டும். பதறின காரியம் சிதறும். மெதுவாகச் செல்வோனே குறியடைவான். பழைய வழி தான் நல்ல வழி. அதுதான் எப்போதுமே நடக்ககூடிய வழி. உலகத்தில் எல்லாக் காரியமும் படிப்படியாகத்தான் ஏறுகிறது. படீலென்று ஏறினால், படிலென்று விழ நேரிட லாம். காற்ருடி துள்ளிப் பாய்கிறது. சூரியன் ஒரே கணக் காக நடக்கிருன். அவன் நெறி மாறுவதில்லை, தாழ்ப்ப தில்லை, செல்லுகிருன்: எப்போதுமே ஏறிச் செல்லுவான், பழைய வழிதான் வியாபாரத்துக்குச் சரியான வழி.