பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 கும் இருக்கின்றது. மகத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும்படி நான் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிருேம். இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானல், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வரவேண்டும். நிலை கொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்குதல் சாத்தியமில்லை. ஏழையாக இருப்பவன் பெரிய செல்வகை வேண்டுமானல் பல வருஷங்கள் ஆகின்றன. கல்வி யில்லாதவர் கற்றுத்தேறப் பல வருஷங்கள் ஆகின்றன. உலகத் தொழில்களிலே தேர்ச்சியடைய வேண்டுமானல் அதற்குக் காலம் வேண்டும். ஆத்ம ஞானம் பெறுவதற்குக் காலம் வேண்டும். 'பொறுத்தவன்பூமியாள்வான்.'பதறின. காரியம் சிதறும்'. இடையே குறுக்கிடும் மரணம் இங்ங்ணம் இன்பங்களின் தேட்டத்தில் நம்மால் இயன்ற வரையில் இடைவிடாமல் முயற்சி செய்து கொண்டு நாம் காலத்தின் பக்குவத்துக்காகக் காத்திருக்கும்படி நேரிடுகிறது. இதனி டையே மேற்படி பிச்சைக்காரன் பாட்டு வாஸ்தவமாய் விட்டால் என்ன செய்வது? தூங்கையிலே வாங்குகிற மூச்சு அது சுழிமாறிப் போனலும் போச்சு! என்ன ஹிம்ஸை இது? நூறு வயதுண்டு என்பதேனும் நல்ல நிச்சயமாக இருந் தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ காரியம் முடித்து விடலாம். அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை என்று தீர்ந்துவிட்டால் எதைக் கொண்டாடுவது? இது கட்டி வராது. எப்படியேனும், தேகத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம். அதுவரை நாம் சாகமாட்டோம் நம் இச்சைகள் நம்முடைய தர்மங்கள் நிறைவேறும் வரை நமக்கு மரணமில்லை,