பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 ஆயினும், நேசக் ககதியாரின் தீர்மானங்களை ஆதாரமாகக் கொண்டு மேலே விவாதங்கள் நடத்துவது ஸாத்யமில்லை யென்றும், அத்தீர்மானங்களுக்கெதிரிடையாக ஜெர் மானிய ஆலோசனைகளை வெளியிடப் போவதாகவும் அந்த மந்திரி தெரிவித்தார். நேசக் ககதியாரின் பாரீஸ் தீர்மானங்களின்படி ஜெர் மணி நாற்பத்திரண்டு வருஷங்களில் இருபத்தீராயிரத்து அறுநூறு கோடி (26000, 000, 000) தங்க 'மார்க்' அல்லது முந்நூராயிரங் கோடி (3000, 000, 000, 000) காயித 'மார்க்' செலுத்த வேண்டுமென்றும், அதனுடனே : இன்னும் 42 வருஷங்கள் வரை ஜெர்மனியின் ஏற்றுமதி களின் கிரயத்தில் 100-க்கு 12 வீதம் செலுத்திக் கொண்டு வரவேண்டு மென்றும் விதிக்கப்பட்டிருக்கிறது. பிந்திய வகையில் இன்னும் ஒரிரண்டாயிரம் கோடி 'மார்க்' அதிகமாகத் தட்டலாமென்று நேசக் ககதியார் நினைப்ப தாக வோன் ஸிமோன்ஸ் சொல்லியபோது ரெயிக் ஸ்தாக் அங்கத்தினர் நகைத்தார்களென்று ராய்ட்டர் தந்தி தெரிவிக்கிறது. இதினின்றும் ஜெர்மானியர் நஷ்டஈட்டுத் தொகை செலுத்தும் விஷயத்தில் நேசக் ககதியாரின் கட்டளையை உடனே எதிர்ப் பேச்சில்லாமல் நிறைவேற்று வார்களென்று நினைக்க இடமில்லாமலிருக்கிறது. இந்தத் தீர்மானங்களை ஜெர்மானியர் அங்கீகரியாவிடின், அவர் களுக்கு விதிப்பதாக எண்ணியிருக்கும் தண்டனைகளுக் கிடையே அவர்களை ஸ்ர்வதேச ஸங்கத்தில் சேர்க்கமாட் டோமென்பதொன்று. ஆனல் அந்த ஸங்கத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி ஜெர்மனி இன்னும் பிரார்த்தனை யனுப்பவில்லை யாதலால், அந்த தண்டனை அதிகமாகப் பொருட் படுத்தத் தக்கதன்றென்று வோன் ஸிமோன்ஸ் குறிப்பிட்டபோது "ரெயிக் ஸ்தாக்' அங்கத்தினர் கரகோஷம் புரிந்தார்களாம்,