பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

il 6 ஆனால், இவ்விதமான கார்யங்களை ராஜாங்கத்து மந்திரிகள் செய்வாரானல், அவர்கள் ராஜ்ய பாரத்துக்குத் தகுதியற்ருேராய் வி டு கி ரு ர் க ள். மேலும், மனுஷ்ய ஸ்ஹோதரத்வம், ஸ்மத்வம் இவை ஐர்லாந்துக்குண் -ா, இல்லையா? அரபியாவுக்கும் மெஸ்பொடோமியாவுக்கும், இந்தியாவுக்கும், எகிப்துக்கும் அவை உண்டா, இல்லையா? இல்லை யெனில், ஏன் இல்லை? தெய்வ விதிகளுக்கு மாற் றில்லை. கொடுமையும் அநீதியும் செய்வோர் கொடு மைக்கும் அநீதிக்கும் இரையாவர். பிறரை அடிமைப் படுத்துவோர், தாம் அடிமைகளாக்கப்படுவர். அநியாயம், ஸ்மத்வ விரோதம் முதலியவற்ருல் ஐரோப்பிய மஹா யுத்தத்தில் அ பார மான கஷ்டங்களுக்குட்பட்டும், ஐரோப்பிய ராஜதந்திரிகளுக்கு இன்னும் புத்தி தெளியாம லிருப்பது பற்றி விசனப்படுகிருேம். -பாரதி தமிழ் 30 பூகோள மஹா யுத்தம்' 12 பிப்ரவரி 1921 ஐரோப்பாவைப் பிடித்த சனி இன்னும் முற்றிலும் நீங்கியதாகத் தெரியவில்லை. சென்ற நான்கு நூற்ருண்டு களில் ஐரோப்பா கல்வித் தேர்ச்சி, இயற்கை யறிவு முதலி யவற்றில் எவ்வளவோ மேன்மை யடைந்திருக்கிறது. ஆனல் அதை அக்கல்வி முதலியவற்ருல் எய்தக் கூடிய முழு நலத்தையும் எய்தாதபடி தடுத்து, ஏறக் குறைய ஸ்மசான நிலைமையில் கொண்டு சேர்த்தது யாதெனில், அதன் ஓயாத போர் நினைவு ஐரோப்பாவில் ஸ்தா ஏதேனு மோர் யுத்தம் நடந்து கொண்டிருக்கும். அல்லது விரை வில் ஒரு யுத்தம் வரப் போவதாகப் பேசிக் கொண்டிருப் பார்கள்,