பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 அந்தக் கண்டத்தாரின் மனதிலிருந்து யுத்தபயம் முற்றிலும் நீங்கியிருந்த ஒற்றை rணமேனும் பல நூற்ருண்டுகளாகக் கிடையாது. இதனிடையே, சென்ற நான்கு நூற்ருண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் ஒருபாகத்தினுள்ளே ஒதுங்கி வாழ்ந்த வெள்ளை ஜாதியார்கள் இன்றைக்கு ஐரோப்பா முழுவதையும், அமெரிக்காக் கண்ட முழுதையும், ஆஸ்திரேலியாவையும், ஆப்ரிகாவில் முக்காலே யரைக்காற் பங்கையும், ஆசியாவில் பாதிக்கு மேற் பகுதியையும் தமக்குக் கீழ்ப்ாடுத்திக் கொண்டு விட்டார்கள். இங்ங்ணம் இந்த நான்கு நூற்றுண்டுகளுக்குள்ளே பல கண்டங்களை வெல்லும் சக்தி இவர்களுக் கேற்பட்டதன் காரணம் வெடி மருந்து, துப்பாக்கி, பீரங்கிகள். இந்த ஆயுதங்கள் மற்றக் கண்டத்தாரின் வசப்படு முன்பு வெள்ளே ஜாதியாருக்கு வசப்பட்டன. அதனல் பூமண்ட லம் அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழே வீழ்ந்தது. ஆனல், இங்ங்ணம் உலக முழுதையும் வென்று, அங்கெல்லாம் தங்களுடைய வியாபாரத்தையும் நிலை நிறுத்தி ஏராளமான செல்வங்கள் திரட்டி ஐரோப் பாவுக்குக் கொணர்ந்த ஐரோப்பியர் அந்தக் குவை குவை யான திரவியங்களையும், அவர்களுக்கு 'ஸயன்ஸ்' ஞானத் தால் இயற்கையின் மீது கிடைத்த புதிய சக்திகளையும் யுத்தத்தில் உபயோகப் படுத்துவதே முதற் கடமையாகக் கருதினர். திருஷ்டாந்தமாக, வான விமானம் பறக்கத் தொடங் குவதற்கு முன்னதாகவே ஐரோப்பியர் அதைப் போரிலே உபயோகப் படுத்துவதெப்படி என்பதைக் குறித்து யோசனை செய்யத் தொடங்கி விட்டார்கள், !