பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 பயத்திற்கிரையாதல் அவசியமில்லை. அது வெறும் பேதை யச்சம். ஆனல் நம்முடைய சொல் ஐரோப்பாவில் எட்டு வதைக் காட்டிலும் லண்டன் 'டைம்ஸ்' பத்திரிகையின் சொல் அதிகமாகவும் விரைவாகவும் எட்டுமே? அதற் கென்ன செய்யலாம்? -பாரதி தமிழ் 31. மண்ணுலகம் வீட்டு வியாபாரங்களையும் எனது சொந்த வர்த்த மானங்களையும் குறித்துச் சில திருஷ்டாந்தங்கள் காண் பித்தேன். இனி, வெளி வியாபாரங்கள், எனது மித்திரர், அயலார் முதலியவர்களின் செய்திகள் ஸம்பந்தமாகச் சில திருஷ்டாந்தங்கள் காண்பிக்கிறேன். திருவல்லிக்கேணி யிலே "செ.......... .....ஸங்கம்' என்பதாக ஒர் தேச பக்தர் சபை உண்டு. அதில் தேசபக்தர்கள்தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து, 'காரியங்கள்". -ஒரு காரியமும் நடக்கவில்லை-நடத்தினோம். நாங்கள் தேசபக்தர்கள் இல்லையென்று, அந்தச் சுவை ஒன்றுமில்லா மற் போனதிலிருந்தே நன்கு விளங்கும். நான் சோம்பருக்குத் தொண்டன். எனது நண்பர் களெல்லாம் புளியஞ்சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்: "காலணு'வின் அடியார்க்கும் அடியார். ஆனல், எங்களிலே ஒவ்வொருவனும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும் படியாக இருக்கும். பணத் தொண்டரடிப்பொடி யாழ்வார் எங்களெல்லோரைக் காட் டிலும் வாய்ப் பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக نفسه، صعي هلسt