பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 (5) உள்நாட்டிலேயே பல புதிய காலேஜ்களேற் படுத்தி நாகரீக தேசங்களிலிருந்து தக்க நிபுணர்களைத் தரு வித்துக் கல்வி போதிக்கப்பட்டு வருகின்றது. (6) கீழ்தர ஜனங்களுக்குள்ளேயும் கல்வி பரவும் பொருட்டாகப் பல முயற்சிகள் நடைபெறுகின்றன. இவை போன்ற அபிவிருத்திகள் எத்தனையோ உள. இப்போது சிறிது காலமாக ஜனப்பிரதிநிதிகளை வைத்து ஆட்சி நடத்தும் மேல்நாட்டு முறைமை அனுசரிக் வேண்டுமென்று ஆலோசனை நடைப்பெற்று வந்தது. ஜனப் பிரதிநிதிகளாலே ஜனங்கள் ஆளப்பெறுவதும், மனுஷ சுதந்திரமே தேசாபிவிருத்திக்கு இன்றியமையாத விஷயங்க ளென்றும் உலக சரித்திரம் நமக்கு நன்கு புலப்படுத்திவிட் டது. ஆதலால், இந்தப் பெரு விஷயத்தைப் பற்றி சீன கவர்ன்மெண்டார் கருதத் தொடங்கியது மஹா சந்தோஷ கரமான சமாசாரம். இதன்பின், சீன சக்ரவர்த்தி 'தேச ஜனங்கள் பக்குவநிலை அடைந்தவுடனே' பிரதிநிதியாட்சி முறைமை ஏற்படுத்தத் தான் தயாராகயிருப்பதாக ஒரு சன்னத்துப் பிறப்பித்திருக்கிருரென்பதாக ஒர் தகவல் கிடைத்திருக்கிறது. சுயாதீனப் பிரியர்களாகிய எல்லோர் மனதிலும் இது மகிழ்ச்சியுண்டாக்குமென்று நம்புகிருேம். சீன தனது தூக்க நிலையிலிருந்து எழுந்துவிட்ட தானல் பிறகு கீழ்த்திசை முழுவதும் உன்னத நிலைக்கு வந்துவிடுமென்பதில் சந்தேகமில்லை. இது நிற்க, சீன சக்கரவர்த்தியின் சன்னத்திலே “தேச ஜனங்கள்பக்குவ நிலையடைந்தவுடனே' என்று எழுதப்பட்டிருப்பது சிறிது அபிவிருத்திக்கு இடமாயிருக்கிறது. சுயாதீனம் கொடுத் துத்தான் ஜனங்களை சுயாதீனத்துக்குத் தகுதியாக்க வேண்டும். அவர்கள் தகுதியடையும் வரை பார்த்திருந்து