பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பிறகு கொடுக்கலாமென்பது மூடத்தனமான யோசனை நீச்சுத் தெரிந்த பிறகுதான் தண்ணிரில் இறங்கலா மென்பது எவ்வளவு மடமை? நன்றி: பாரதி தரிசனம்-முதற்பாம். 33. ஜப்பானுக்கு ஹிந்து உபதேசிகள் அனுப்புதல் நவம்பர் 10, 1906 ஒரு மனிதருக்கேனும் ஒரு ஜாதியாருக்கேனும் ஈசுவரன் ஞானத்தைக் கொடுத்து இருப்பது இவர்களின் சொந்த அலங்காரத்தின் பொருட்டாக இல்லை; இவர் களுடைய ஞானத்தை மற்ற ஜனங்களுக்குப் பரப்பும் பொருட்டாகவேயாகும். செல்வத்தைப் பெற்றிருப்பவன் அதைப் புதைத்து வைக்காமல் மற்ற ஜனங்களுக்கும் உதவி செய்யக் கடமைப்பட்டிருப்பதைப்போலவே ஞானமுடைய வனும் அதையெல்லோருக்கும் தாராளமாக வழங்கக் கடமைப்பட்டிருக்கிருன். ஹிந்து ஜாதியார் மற்றெந்த விஷயத்திலும் குறைவு பட்டிருந்த போதிலும், தத்துவ ஞான விஷயத்திலே இவர் களிடம் சில அருமையான மைேரத்தினங்களிருக்கிற தென்பதை உலகத்தார் அனைவரும் ஒரே மனத்துடன் அங்கீகரித்திருக்கிரு.ர்கள். லோபித்தனமான நம்மவர்கள் இந்த அருமையான ஞானரத்தினங்களைப் புதைத்து வைத்துக் கொண்டிராமல் எல்லா தேசத்தார்களுக்கும் வழங்குதல் பொருந்தும். மு ற் கால த் தி ல் எல்லாம் இங்ங்னமே நடை பெற்று வந்தது. ஆனால், இந்தியா பதனமடைந்து இந்தியர்களைச் சுற்றி பலவிதமான......