பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மடத்து சந்நியாசிகள் இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிருேம். அவர்களுடைய ஞானவிதைகளை ஊன்றுவதற்கு அமெரிக்காவைக் காட்டி அலும், ஜப்பான் மிகவும் பக்குவமான பூமியாகும். மேலும் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இக்காலத்தில் பலவிதமான சம்பந்தங்களேற்படுத்துவது பலவிதமான நன்மைகள் உ ண் டா க க் கூடியது. ஜப்பானியர்களால் நமக்கு எத்தனையோ காரியங்கள் ஆகவேண்டி இருக்கிறது. ஜப்பானியரிடமிருந்து நாம் எத்தனையோ விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஜப்பானியர்கள் நமது தேசத்தை தேவலோகம்’ என்ற பாஷையிலே வழங்கி வருகிருர்களென்பது முன்னமே சொல்லியிருக் கின்ருேம். அத் தேசத்தாருக்கு நம்மிடமுள்ள மதிப்பை நாம் வளர்க்க முயற்சி புரிய வேண்டும். இவ்விஷயத்திற்குத் தக்க உபதேசிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது நமது செல்வர்களாலும் மடாதிபதிகளாலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நன்றி : பாரதி தரிசனம்-முதற்பாகம். 34. திரான்ஸ்வால் இந்தியரின் கஷ்டம் டிசம்பர் 8, 1906 ஒ நா ய் ஆட்டுக்குட்டிகளிருக்கும் இடத்திற்கு வந்தால் ஒநாயின் பாடு வெகு உல்லாசம்தான். ஆனால், ஒநாய்கள் இருக்குமிடத்திற்கு ஆட்டுக்குட்டி செல்லு மால்ை இதன் பாடு வெகு கஷ்டம். இந்தியர்களுக்கும் வெள்ளை ஜாதியாருக்கும் இப்போதிருக்கும் சம்பந்தம் மேற்கண்ட விதமாகவே இருக்கிறது. இந்தியாவுக்கு ஒரு