பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தீர்வைகள் சுமத்தி கூடியவரை அமுக்கி வைத்திருக்க வேண்டுமென்ற சீர்திருத்தம் இவர் நெடுங்காலம் விரும்பி வருகின்றர். அதையும் இந்தக் கடிதத்தில் வற்புறுத்து கின்றர். அமெரிக்காவில் செல்வம் வரம்புக்கு மிஞ்சி வைத்துக் கொண்டிருப்பவர்களால் பொதுஜனங்கள் எவ் விதமான பெருந்தீமைகள் விளைவதென்பதை ஆராய்ச்சி புரிவோமானல் இவர் விரும்பும் சீர்திருத்தம் அவசியமென் பதுவிளங்கும். 冰 米 米 ரூஸ்வெல்ட் அதிபர் எல்லா தேச ஜனங்களையும் சமமாக நடத்த வேண்டுமென்று சொல்லி இருப்பதைப் பற்றி வெகு சந்தோஷத்துடன் எழுதுவதைக் கவனிக்கும் போது இங்கிலாந்து அவ்வாறுதான் நடந்து வருகின்றதோ? நன்றி : பாரதி தரிசனம்-முதற்பாகம் 36. பாரnக தேசத்தில் பிரதிநிதி ஆட்சி முறைமை torrifj; 16, 1907 கீழ் திசையிலுள்ள தேசத்தாருக்குக் கொடுங்கோலரசு தான் பொருந்தி வருமென்றும், ஜனப் பிரதிநிதிகள் சேர்ந்து பொதுஜன விருப்பத்திற்கிணங்க அரசாகும் முறைமை பொருந்தமாட்டாதென்றும் நம்புவது ஐரோப் பியர்களின் மூட பக்திகளிலே ஒன்று. நமக்குள்ளே கிராம பஞ்சாயத்துக்கள் இருந்ததை வெள்ளைக்காரர்கள் மறந்து விடுகிருர்கள். பூர்வத்திலே பிரதிநிதி ஆட்சி முறைமை இருந்ததா? இல்லையா? என்பதுகூட நமக்கு இப்போது முக்கிய விவகாரமில்லை. இனி நமக்கு இஷ்டமுண்டானல் அவ்வித ஜன ஆட்சி முறைமை ஏற்படுத்திக் கொள்ள