பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 லண்டன் 'டைம்ஸ்’ பத்திரிகை இவ்விஷயமாக சில தினங்களின் முன்பு பிரஸ்தாபம் செய்திருப்பதில் பெர்ஷி யாவில் ஏற்பட்டிருக்கும் புது ஆட்சி முறைமை நிலைத்து நிற்குமா என்பதைப்பற்றி வெகு சந்தேகத்துடன் எழுது கிறது. இப்படி இவர்கள் ஒருபுறம் விசாரமடைந்து கொண்டிருக்க, மற்ருெரு புறம் கீழ்திசை நாடுகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்ருக அபிவிருத்தியடைந்து கொண்டு வரு கின்றன. இந்தியாகூட பிரதிநிதியாட்சி வேண்டுமென்று கேட்கிறது. சுய ஆட்சி வேண்டுமென்கிறது. சும்மா சொல்வதுமட்டுமா? சீக்கிரம் பெற்றுவிடவும் செய்யும் என்று தோன்றுகிறது. ஸ்ர்வலோக நாயகர்களாகிய வெள்ளை ஜனங்களுக்கு இவ்வாறு அடிக்கடி துக்கங்கள் நேர்ந்து வருவதுபற்றி நாம் மிகவும் அனுதாபம் தெரிவிக் கின்ருேம். நன்றி : பாரதி தரிசனம் -இரண்டாம்பாகம். 37. துருக்கியின் நிலை 15 நவம்பர், 1920 துருக்கிக்கும் நேசக் ககதியாருக்கும் நடந்த உடம் பாட்டைத் துருக்கி இன்னும் உறுதி செய்யவில்லை. மறு படியும் ஒரு முறை தேசீயக் ககதியாரால் துருக்கிக்குச் சற்றே லெளகர்யம் ஏற்படலாமென்று தோன்றுகிறது. பால்கன் யுத்த முடிவில் துருக்கி தோற்றுப் போய்விட்டது. தேசீயக் ககரிக்கு விரோதமான மனிதர் துருக்கியில் ஆட்சி செலுத்தி வந்தனர். அவர்களுடைய கொள்கை எப்படி யிருந்த தென்ருல் :- உள்நாட்டில் தேசீயக் ககதியாரின் சக்தியைக் குறைக்கும் பொருட்டு, அன்னியரின் உதவி பெற்று அதனல் அந்த அன்னியர்கள் நம்மைக்குதிரையேறக்கூடிய நிலைமை