பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழ் நாட்டையும், தமிழ் மொழியையும் புகழ்ந்து எழுதி, அவற்றின் பெருமையைத் தெளிவாக எடுத்துக் காட்டி பாரதியார் தமிழ் மக்களைத் தட்டி எழுப்புகின்ருர். விடுதலைப் போருக்கு ஆயத்தமாகும்படி துணிச்சல் கொள்ளச் செய்கின்ருர். இவற்றையெல்லாம் பாரதியும் தமிழகமும் என்ற நூலில் பார்த்தோம். பாரதியாருடைய பார்வை தமிழ் நாட்டோடு மட்டும் நின்றுவிடவில்லை. தமிழ் நாட்டைப் புகழ்ந்து பேசுகின்ற அதே மூச்சில் அவர் பாரத தேசத்தையும் போற்றுகின்ருர். தமிழ் நாடு பாரத தேசத்தில் இணை பிரிக்க முடியாத பகுதி என்றும், பாரத தேசத்தின் பெருமைகளிலும் சிறுமைகளி லும் தமிழ் நாடும் பங்கு கொள்ளுகின்றது என்றும் தெளிவாகக் காட்டுகின்ருர். முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்று ஐயத்திற்கு இடமில்லாமற் பாடுகின்ருர். வெள்ளிப் பணிமலையின் மீதுலாவுவோம் அடி மேலேக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்று பாரதியார் பாடும்போது அவர் எத்தகைய பரந்த உள்ளத்தோடு பரவசமாகப் பாடுகின்ருர் என்பதை எண்ணி மெய் சிலிர்க்கின்ருேம்.