பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தேசீயக் ககதிப் படைகளையும், தக்க உபபலங்களையும் வைத்துக்கொண்டு கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்தி லுள்ள துருக்கிய அதிகாரிகளிடம் த்ரேஸ், ஸ்மர்ன மாகாணங்களை இழந்துவிடாமல் இருக்கும்படி வற்புறுத்தி வருகிருர். இப்போது ஸெவர் உடம்பாட்டை உறுதி செய்யுமாறு நேசக் ககதியார் வற்புறுத்தியதற்குத் உத்திர மாகத் துருக்கி கவர்மெண்டார் அவ்விஷயம் இப்போது அத்தனை அவஸ்ரமில்லையென்று கமால் பாஷாவின் கூட்டத் தாரை ஸமாதானப்படுத்தும் பொருட்டாக அதைச் சற்று மெதுவாகவே கவனிக்கும்படி நேர்கிறதென்றும் தெரிவித் திருக்கிருர்கள். நேசக் ககதியாருக்குள்ளேயே ஸமாதான நிபந்தனைகளைப் பற்றிய பூர்ண மன வொற்றுமையில்லாம லிருப்பதை யறிந்தே துருக்கிய அதிகாரிகளுக்கு இங்ங்னம் சொல்ல தைர்யம் ஏற்பட்டிருக்கக் கூடுமென்று நினைக் கிருேம். ஜெர்மனி விஷயத்திலேயே பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் மேன்மேலும் அபிப்பிராய பேதங்கள் தோன்றி வருகின்றன. அமெரிக்காவோ சொல்ல வேண்டியதில்லை; "இங்கிலாந்தினிடம் எனக்கு விரோதம் கிடையாது' என்று அமெரிக்காவின் புதிய ஜனதிபதியாக நியமனம் பெற்றிருக்கும் ஹார்டிங் என்பவர் சொல்லு கிருர். நம்முடைய பிரான ஸ்நேஹிதகை உயிர்த்துணை யாக இருந்த ஒருவன் இப்போது நமக்கும் தனக்கும் விரோதமில்லை யென்று சொல்ல நேர்ந்தால் முன் இருந்த ஸ்நேஹ நிலை எத்தனை தூரம் குறைந்து போய்விட்ட தென்பது சொல்லாமலே விளங்கும். இத்தாலியோ மிகவும் அபாயகரமான உள்நாட்டுக் குழப்பத்தில் அழுந்திக் கிடக்கிறது. இந்த நிலையில் தாமேன் தமது கழுத்திலே அவசரமாகச் சுருக்குப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று துருக்கி நினைத்தே இங்ங்னம் வாயிதா போடுகிற தென்று தோன்றுகிறது. ஆனல் இங்கனம் துருக்கி