பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இங்கிலாந்தில் தொழிற் ககதியாரிடையே மாத்திரந்தான இருக்கிருர்கள்? மற்றக் ககதியாரிடையே கிடையாதா? திருஷ்டாந்தமாக, ஸர்க்கார் உத்யோகம் கிடைக்கும் வரை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தாமே, ஜர்லாந்தின் விடுதலைக் காக மனமுருகிக் கண்ணிர் விட்டுக்கொண்டிருக்கவில்லையா? எனவே, தொழிற் ககதியாரைப் பெயர் சொல்லிக் குறிப் பிட்டதன் காரணம் யாதென்ருல் கட்டாய ராணுவ லேவகம் சட்டமாகும் பrத்தில் அது மற்ற திரவிய வந்தர், வியாபாரிகள், உபாத்தியாயர் மந்திரிகள் முதலிய வகுப்பினரைத் தீண்டுவதைத் காட்டிலும் ஏழைத் தொழிலாளிகளையே அதிகமாகத் தீண்டுமென்ற விஷயம் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜின் மனதிலிருந்து, அது அவரை மீறியே, வேருெரு விஷயத்தைப் பற்றிப் பேசுகையில்: அவர் நாவிற்கு வந்துவிட்டது. இது நிற்க ஐர்லாந்தின் விஷயமாக மந்திரி லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லும் விஷயங் களை மீண்டும் கவனிப்போம். மேலும், ஐர்லாந்திலேயே, (ப்ராட்டஸ்டெண்ட்) வர்க்கத்தாரின் தொகையும் செல்வாக்கும் மிகுதிப்பட்டது இங்கிலீஷ் ஆட்சிக்குச் சார்பாக நின்று பொது ஐரிஷ் விடுதலையை எதிர்ப்பதுவுமாகிய அல்ஸ்டர் மாகாணத்தை அதன் ஸம்மதத்துக்கு மாருக எந்தப் பார்லிமெண்டுக்கும் (அதாவது, ஐரிஷ் பார்லிமெண்டுக்கு) உட்படுத்துவதாக உத்தேசங் கிடையாதென்பதை மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் அழுத்திக் கூறினர். அல்ஸ்டர் மாகாணத்துக்குத் தனிப் பார்லிமெண்ட் கொடுப்பதே, ஒற்றுமையை நிலை நிறுத்து வதற்குத் தக்க உபாயமென்று தெரிவித்தார். எந்த ஒற்றுமையை? ஐரிஷ் ஒற்றுமையையா? ஒரு தேசத்துக்கு இரண்டு பார்லிமெண்ட் கொடுத்து, அந்த தேசத்தை ஒற்றுமைப்படுத்துவது வி ேநா த மா ன வழிதான். லண்டனில் ஒரு பார்லிமெண்ட், மான்செஸ்டரில் ஒரு