பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I46 பதையும், ஐர்லாந்தில் ஸமாதான மேற்படும் வரை இங்கிலாந்திற்கு ஸமாதானம் ஏற்பட வழியில்லை யென் பதையும் மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் ஒருங்கே மறந்து விட்டது பற்றி வருத்தப்படுகிறேன். - ரஸத்திரட்டு என்ற கட்டுரை- பாரதி தமிழ் 40. நாகரீகத்தின் ஊற்று 4 பிப்ரவரி 1921 ப்ரான்ஸ் தேசத்து முதல் மந்திரி ஸ்தானத்திலிருந்த வராகிய பூரீமான் க்ளெமான்ஸோ சில தினங்களாக இந்தியாவில் லஞ்சாரம் பண்ணி வரும் செய்தி நம் நேயர் களுக்குத் தெரிந்ததேயாம். இவருக்குச் சில நாட்களின் முன்னே பம்பாயில் நடந்த விருந்தின்போது இவர் செய்த ப்ரஸங்கத்தில் பின்வரும் ஸார மயமான வாக்யம் காணப் படுகிறது : 'ப்ரான்ஸிற்காக இரத்தம் சிந்திய மக்களைப் பெற்ற தேசத்தை வந்து பார்த்தது எனக்குப் பெருமையுண்டாக்கு கிறது. ப்ரெஞ்ச் குடும்பங்களுடன் இந்திய சிப்பாய் களிருந்த போது நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய மரியாதையும்.அன்பும் ப்ரான்ஸ் தேசத்தாரை மோஹிக்கும் படி செய்தன. கீழ்த்திசையானது நாகரிகத்தில் குறைந்த தன்று. அன்பு மானுஷகம் என்பவற்றிற்குரிய மஹோந்நத லகடியங்களெல்லாம் கீழ்த்திசையிலிருந்து வந்தன. மேற்குத் திசையார் அவற்றை ஸ்வீகரித்துத் தம்முடைய லக்ஷயங்களாகச் செய்துகொண்டனர். எனவே, உங்களைக் காட்டிலும் உயர்ந்த நாகரிகத்தின் ப்ரதிநிதியாக என்னை மதித்து நான் உங்களோடு பேசவில்லை. (இந்தியாவாகிய)