பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 52 தர்ம சாஸ்திரத்தை எடுங்கள் :பஞ்சபாண்டவர் காலத்தில் ஒரு ஸ்திரீ பல புருஷரை விவாகம் செய்துகொள்ளலாம். வேதவியாஸர் காலத்தில் தமையன் பிள்ளையில்லாமல் இறந்து போனல் தம்பி அவனுக்கு ஸ்ந்ததி ஏற்படுத்திக் கொடுக்கலாம். விசுவாமித்திரர் காலத்தில் கடித்திரியர் அறிவில்ை பிராமணராகிவிடலாம். மனுஸ்மிருதியின் விதிகள் வேறே. பராசரர் விதிகள் வேறே. நடப்பிலுள்ள வைத்தியநாத தீrதர் விதிகள் வேறே. இங்கிலாந்துக்கு வேறு ஸ்மிருதி. ப்ரான்ஸ் தேசத்துக்கு வேறு. பாரளிகத்துக்கு வேறு. நமக்கு வேறு. நமக்குள் வடநாட்டில் வேறு. தென்னட் டில் வேறு. வைஷ்ணவருக்கு வேறு. ஸ்மார்த்தருக்கு வேறு. சாஸ்திரங்களேயெல்லாம் காலத்துக்குத் தகுந்தபடி மாற்றிக்கொண்டு போகிருேம். வேதத்தைத்தான் மாற்ற முடியாது; உண்மையான வேதமாக இருந்தால். நாட்டு விதி நாட்டு விதி என்பது அர்த்த, நீதி சாஸ்திரங்களின் விதி. இதனைத் தற்காலத்தோர் அரசியல் விதியென்று சொல்லுகிருர்கள். அதுவும் சாஸ்திர விதியோடு சேர்ந் ததுதான். ஆனல் மற்ற இலக்கணம் முதலிய சாஸ்திரங் களின் விதிகளைக் காட்டிலும் அரசியல் விதிகள் மிகவும் விரைவுடன் மாறுபடுவதால் இதனைத் தனியாக ஒரு பகுதி யாக்கும்படி நேரிட்டது. எனவே, தெய்வ விதிக்குப் பரிபூரணமாக உட்பட்டு சாஸ்திர விதிகளையும் நாட்டு விதி களையும் மேன்மேலும் புத்திசாலித்தனமாகச் சீர்திருத்திக் கொண்டு வந்தால், மனுஷ்ய ஜாதிக்கு ஷேமமுண்டாகும். பாரதி தமிழ்.