பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மானுடச் சாதி ஒன்று: மனத்திலும், உயிரிலும், தொழிலும் ஒன்றே ஆகும்! விடுதலை என்ற நாடகத்தில் இவ்வாறு தெளிவுபடுத்து கிருர் பாரதியார். உன்னுடைய ஆத்மாவும், உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலே, ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம். (இனி என்ற கட்டுரையில்) இந்த உணர்வு மலரும் போதுதான், 'மண்ணுலகத்து மானுடன் தன்னைக் கட்டிய தளையெலாம் சிதறுக’ என்று பிரமதேவன் இந்திரனுக்குக் கட்டளையிடுவதாக அவர் எழுதுகிரு.ர். 'வாழ்க தந்தை; மானுடர் வாழ்க’ என்று அக்தி வாழ்த்துகிருன். 'உண்மை வாழ்க, உலகமோங்குக. தீது கெடுக, திறமை வளர்க" என்று மற்றவர்கள் வாழ்த்தெடுக் கிருர்கள். -விடுதலை-நாடகம். பாரதியாருக்கு இவ்வாறு பாடத் தோன்றுகிறது. இந்தப் பரந்த உள்ளுணர்வின் விளைவாகவே, 'பகைவனுக்கு அருள்வாய்' என்ற பாட்டுப் பிறக் கின்றது. இது மட்டுமல்ல. மண்ணில் யார்க்கும் துயர் இன்றிச் செய்வேன் (ஹே காளி) என்றும்,